Hadith for the World
Tap the image to view it full size
பிக்ஹும் அதன் அடிப்படைகளும்

அபூ ஹூறைரா ரழியல்லாஹூஅன்ஹூ அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது:

Available in 65 languages
«அபூ ஹூறைரா ரழியல்லாஹூஅன்ஹூ அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் பார்வையற்ற ஒரு மனிதர் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! என்னைப் பள்ளிவாசலுக்கு அழைத்து வரக்கூடிய வழிகாட்டி எவரும் எனக்கு இல்லை' என்று கூறி, வீட்டிலேயே தொழுது கொள்ள தமக்கு அனுமதியளிக்குமாறு கோரினார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம அவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள். பிறகு அவர் திரும்பிச் சென்றபோது அவரை அழைத்து, 'தொழுகை அறிவிப்பு சப்தம் (அதான்) உமக்குக் கேட்கிறதா?' என்று கேட்டார்கள். அவர் 'ஆம்' (கேட்கிறது) என்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் 'அப்படியானால் நீர் அதற்கு செவிசாய்ப்பீராக!' (கூட்டுத்தொழுகையில் வந்து கலந்துகொள்வீராக!) என்று கூறினார்கள்.»

Meaning translation ·

Explanation

The meaning in a few plain lines

கண்பார்வையற்ற ஒரு மனிதர் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து அல்லஹ்வின் தூதரே ஐவேளைத் தொழுகைகளுக்கு என்னை பள்ளிவாயிலுக்கு அழைத்து வர எனக்கு உதவியாளர் எவரும் இல்லை என்று முறைப்பட்டார்கள். அதாவது அவர் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் ஜமாஅத்துடன் தொழாது தனித்து வீட்டிலேயே தொழுவதற்கு சலுகை தருமாறு வேண்டிக்கொள்ளவே அதற்கான அனுமதியை வழங்கினார்கள். பின் அவர் திரும்பி செல்லவே அவரை அழைத்து தொழுகைக்கான அதான் -அழைப்புச் சத்தம் உமக்குக் கேட்கிறதா என்று கேட்டார்கள். அதற்கு ஆம் என அவர் பதில் கூற, அவரிடம் தொழுகையின் அழைப்பாளருக்கு பதிலளிப்பீராக அதாவது பள்ளிக்கு வந்து ஜமாஅத்தில் கலந்து கொள்வீராக என்று கூறினார்கள்.

Source
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
Download image

Saved at original quality