Hadith for the World
Tap the image to view it full size
பிக்ஹும் அதன் அடிப்படைகளும்

அபூ மூஸா ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் அறிவிக்கிறார்கள் :

Available in 60 languages
«அபூ மூஸா ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பின் வரும் விடயம் பற்றி வினவப்பட்டது ஒரு மனிதர் தான் ஒரு வீரன் என்பதற்காக யுத்தம் புரிகின்றார். இன்னொருவர் இனமாச்சரியத்திற்காக யுத்தம் புரிகின்றார். மற்றவர் முகஸ்துதிக்காக யுத்தம் புரிகின்றார். இவர்களில் யார் அல்லாஹ்வின் பாதையில் உள்ளார்? அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: அல்லாஹ்வின் வார்த்தை மேலோங்கி உயர் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக போர் புரிகின்றாறோ அவர் அல்லாஹ்வின் பாதையில் உள்ளார் என்றார்கள்.»

Meaning translation ·

Explanation

The meaning in a few plain lines

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் யுத்தம் புரிபவர்களின் மாறுபட்ட நோக்கங்கள் பற்றி வினவப்பட்டது. அதாவது தான் ஒரு வீரன் என்பதற்காக யுத்தம் புரிபவர். இன்னொருவர் இனமாச்சிரியத்திற்காக யுத்தம் புரிபவர். மற்றவர் முகஸ்துதிக்காகவும் புகழுக்காகவும் யுத்தம் புரிபவர். இவர்களில் யார் அல்லாஹ்வின் பாதையில் உள்ளார்? அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: யார் அல்லாஹ்வின் வார்த்தை மேலோங்கி உயர் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக போர் புரிகின்றாறோ அவர் அல்லாஹ்வின் பாதையில் உள்ளார் என்றார்கள்.

Source
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
Download image

Saved at original quality