Hadith for the World
Tap the image to view it full size
சிறப்புக்களும் ஒழுக்கங்களும்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவதைக் கேட்டதாக அம்ர் இப்னு அபஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தன்னிடம் கூறியதாக அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் :

Available in 55 languages
«அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவதைக் கேட்டதாக அம்ர் இப்னு அபஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தன்னிடம் கூறியதாக அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : ((இரவின் கடைசிப் பகுதியில் இரட்சகனான அல்லாஹ் அடியானுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளான். இந்நேரத்தில் அல்லாஹ்வை நினைவுகூருகிற அடியார்களில் நீயும் ஒருவனாக இருக்கமுடியுமென்றிருந்தால் அப்படி இருந்து கொள்வீராக)).»

Meaning translation ·

Explanation

The meaning in a few plain lines

இரவின் கடைசி மூன்றில் ஒரு பகுதியில் இறைவன் தன் அடியானுக்கு மிக அருகில் வருவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள். முஃமினே ! - இந்த நேரத்தில் அல்லாஹ்வைத் தொழுது அவனை நினைவு கூறி அவனிடம் பாவமன்னிப்புத் கோருபவர்களில் ஒருவராக உமக்கு இருக்க முடியுமென்றிருந்தால் அதற்கு எத்தனிப்பீராக. ஏனெனில் இந்நேரத்தை பயன்படுத்தி அதில் நல்லமல்களில் ஈடுபடுவது மிகவும் தேவையான ஒரு விடயமாகும்.

Source
இமாம்களான அபூதாவுத், திர்மிதி மற்றும் நஸாஈ ஆகியோர் இதை பதிவு செய்துள்ளார்கள்
Download image

Saved at original quality