இஸ்லாமியஅடிப்படைக் கொள்கை
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
Available in 55 languages
«நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : எனக்கு முன்னர் யாருக்கும் கொடுக்கப்படாத ஐந்து அம்சங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு மாத பயணத்ததூரத்தின் அளவு (என்னைப் பற்றிய) பயத்தைக் கொண்டு நான் உதவப்பட்டுள்ளேன். பூமி தொழுமிடமாகவும், சுத்தம் செய்யக் கூடிதாகவும் எனக்கு ஆக்கித் தரப்பட்டுள்ளது. எனவே, எனது சமுதாயத்தைச் சேர்ந்த யாரும் எந்த இடத்தில் தொழுகை நேரத்தை அடைந்து கொண்டாலும், தொழுது விடட்டும். போர்ச் செல்வங்கள் எனக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளன. எனக்கு முன்னர் யாருக்கும் அது ஹலாலாக இருக்கவில்லை. எனக்கு 'ஷபாஆ' எனும் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. நபிமார்கள் தமது கூட்டத்திற்கு மாத்திரமே அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தார்கள். நான் எல்லா மனிதர்களுக்காகவும் அனுப்பப்பட்டுள்ளேன்.»Meaning translation ·
Saved at original quality








