சிறப்புக்களும் ஒழுக்கங்களும்
ஸுலைமான் பின் ஸுரத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
Available in 53 languages
«ஸுலைமான் பின் ஸுரத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது இரண்டு மனிதர்கள் ஒருவரையொருவர் ஏசிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரின் முகம் (கோபத்தால்) சிவந்து விட்டது. அவரது கழுத்து நரம்புகள் புடைத்து விட்டன. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வாராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும், ஷைத்தானைவிட்டு அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்’ (அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தான்) என்று இவர் பிரார்த்தித்தால் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும்” என்று கூறினார்கள்.
ஆகவே, மக்கள் அந்த மனிதரிடம், ‘‘நபி (ஸல்) அவர்கள், ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக்கோருவீராக!› என்று கூறினார்கள்” எனத் தெரிவித்தார்கள். அதற்கு அவர், ‘‘எனக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறது?” என்று கேட்டார்.»Meaning translation ·
Saved at original quality







