Hadith for the World
Tap the image to view it full size
சிறப்புக்களும் ஒழுக்கங்களும்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனக்கு கூறியதாக அபூதர் அல்கிஃபாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:

Available in 70 languages
«நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனக்கு கூறியதாக அபூதர் அல்கிஃபாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதாதீர், அது உமது சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதானாலும் சரியே'.»

Meaning translation ·

Explanation

The meaning in a few plain lines

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் நல்லறங்களை செய்யுமாறு தூண்டியுள்ளார்கள்.அது ஒருவரை சந்திக்கும் போது மலர்ந்த -இன்-முகத்துடன் இருப்பது போன்ற சிறிய ஒரு செயலாக இருப்பினும் சரியே என்கிறார்கள். இதன் மூலம் தனது சகோதர முஸ்லிமுக்கு அன்பு காட்டி, மகிழ்ச்சியை ஏற்படுத்த முடியுமென்பதால் இவ்வாறான விடயங்களை ஒரு முஸ்லிம் அற்பமாகக் கருதாது ஆர்வத்துடன் மேற்கொள்வது அவசியமாகும்.

Source
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
Download image

Saved at original quality