Hadith for the World
Tap the image to view it full size
சிறப்புக்களும் ஒழுக்கங்களும்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக அப்துல்லாஹ் இப்னு அம்ர்ருப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் :

Available in 48 languages
«அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக அப்துல்லாஹ் இப்னு அம்ர்ருப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : 'நிச்சயமாக மனித இதயங்கள் யாவும் கருணையாளனாகிய அல்லாஹ்வின் விரல்களுள் இரண்டு விரல்களுக்கிடையே ஒரு இதயம் போன்று உள்ளது. அவன் விரும்பியவாறு அந்த உள்ளங்களைப் புரட்டுகிறான்' என்று கூறிவிட்டு (அல்லாஹும்ம முஸர்ரிபல் கூலுப் ஸர்ரிப் கல்பி அலா தாஅதிக) ' உள்ளங்களைப் புரட்டக் கூடியவனே! என் உள்ளத்தை உனக்கு கீழ்படிந்து நடப்பதின்பால் திருப்பிவிடுவாயாக!' என்று குறிப்பிட்டார்கள்.»

Meaning translation ·

Explanation

The meaning in a few plain lines

மனிதர்களின் இதயங்கள் அனைத்தும் அர்ரஹ்மானின் இரண்டு விரல்களுக்கிடையில் ஒரே இதயம் போல உள்ளன என நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள். அவன் விரும்பிய வாறு அவற்றை கையால்கிறான். அந்த வகையில் அவன் விரும்பினால் அதனைச் சத்தியத்தின் மீது நிலைப்படுத்துவான். விரும்பினால் அதனைச் சத்தியத்திலிருந்து விலக்கி விடுவான். அனைத்து இதயங்களையும் மாற்றுவது அவனுக்கு ஒரு இதயத்தை மாற்றுவது போன்றாகும். இச்செயற்பாடானது அவனை வேறு எந்தக் காரியத்திலிருந்து தடுக்காது. பின்னர் நபி (ஸல்) அவர்கள் பின்வறுமாறு பிரார்த்தனை செய்தார்கள் : யா அல்லாஹ் இதயங்களைத் திருப்புபவனே! இதயங்களை சிலபோது கீழ்ப்படிதலின்பாலும் சிலபோது பாவத்தின்பாலும் சிலபோது உன்னை ஞாபகப்பபடுத்தவும் சில போது உனது ஞாபகத்தை விட்டு அலட்சியத்தின் பாலும் திருப்பும்போது - எங்கள் இதயங்களை உனக்கு கட்டுப்பட்டுப்பட்டு நடப்பதின் பால் திருப்பி விடுவாயாக.

Source
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
Download image

Saved at original quality