Hadith for the World
Topic

ஹதீஸ், ஹதீஸ் கலைகள்

3 hadiths

3 hadiths

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹுமா கூறுகின்றார்கள் : 'என்னைப் பற்றி ஒரு வார்த்தையேனும் எத்தி வையுங்கள். பனூ இஸ்ராயீல்கள் (இஸ்ரவேல் சந்ததியினர்) பற்றி கூறுங்கள் குற்றமில்லை. என் மீது வேண்டுமென்றே யாரேனும் பொய்யுரைத்தால் அவர் நரகத்தை தனக்குரிய தங்குமிடமாக எடுத்துக் கொள்ளட்டும்'.இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஸமுரா இப்னு ஜுன்துப் மற்றும் முகீரா இப்னு ஷுஃபா ரழியல்லாஹு அன்ஹுமா இருவரும் அறிவிப்பதாவது: 'என்னைப் பற்றி பொய் எனக் கருதப்படும் ஒரு செய்தியை யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்களில் ஒருவராவார்''இமாம் முஸ்லிம் தனது முகவுரையில் இதை பதிவு செய்துள்ளார்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'யார் என்மீது (நான் கூறியதாக) வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும்'.இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்