10 hadiths
அபூ ஸஈத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு நோன்புப் பெருநாட் தினமோ, அல்லது ஹஜ்ஜுப் பெருநாட் தினமோ தொழுமிடத்திற்குச் சென்ற போது, பெண்களிடம் சென்று இவ்வாறு கூறினார்கள்: “பெண்கள் சமுதாயமே! தான தர்மங்கள் செய்யுங்கள். ஏனெனில், நரகவாசிகளில் நீங்களே அதிக எண்ணிக்கையில் எனக்குக் காட்டப் பட்டீர்கள்” என்று குறிப்பிட்டார்கள். அப்போது “அல்லாஹ்வின் தூதரே! ஏன் (எங்களுக்கு இந்த நிலை)?” எனப் பெண்கள் கேட்டதும். “நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; கணவனிடம் நன்றி இல்லாதவர்களாக நடந்து கொள்கிறீர்கள். அறிவிலும் மார்க்கத்திலும் குறைபாடுள்ளவர் களாகவும், தீர்க்கமான யோசனை உடைய ஆண்களின் கூர்மையான அறிவைக்கூட மழுங்க வைப்பவர்களாகவும் உங்களைப் போன்று வேறு யாரையும் நான் கண்டதில்லை” என்று கூறினார்கள். அப்போது அப்பெண்கள், “மார்க்கத்திலும் அறிவிலும் எங்களிடமுள்ள குறைபாடு என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். “பெண்களின் சாட்சியம் ஆண்களின் சாட்சியத்தில் பாதியல்லவா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அப்பெண்கள், “ஆம் (பாதிதான்)” என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அது தான் அவளது அறிவின் குறைபாடாகும்” என்று கூறிவிட்டு, “ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் (தூய்மையாகும் வரை) அவள் தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை அல்லவா?” என்று கேட்டார்கள். அப்பெண்கள் “ஆம் (தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை)” என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அதுதான் அவளது மார்க்கத்தி(ன் கடமையி)லுள்ள குறைபாடாகும்” என்று கூறினார்கள்.இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்