Hadith for the World
இஸ்லாமியஅடிப்படைக் கொள்கை

கழா, கத்ர் மீது விசுவாசம் கொள்ளுதல்

8 hadiths

8 hadiths

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'எந்தப் பாவமும் இல்லாத நிலையில் (பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிலையில்)அல்லாஹ்வைச் சந்திக்கும் வரை, முஃமினான ஆணும், பெண்ணும் தங்கள் சுய வாழ்விலும், தங்கள் குழந்தைகளிலும், செல்வத்திலும் சோதனைகளை அனுபவித்துக் கொண்டே இருப்பார்கள்.'இமாம்களான திர்மிதி மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
عَنِ ابْنِ عَبَّاسٍ رضيَ اللهُ عنهما: أنَّهُ قَالَ لعَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ: أَلَا أُرِيكَ امْرَأَةً مِنْ أَهْلِ الْجَنَّةِ؟ قُلْتُ: بَلَى، قَالَ: هَذِهِ الْمَرْأَةُ السَّوْدَاءُ، أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: إِنِّي أُصْرَعُ وَإِنِّي أَتَكَشَّفُ، فَادْعُ اللهَ لِي، قَالَ: «إِنْ شِئْتِ صَبَرْتِ وَلَكِ الْجَنَّةُ، وَإِنْ شِئْتِ دَعَوْتُ اللهَ أَنْ يُعَافِيَكِ» قَالَتْ: أَصْبِرُ، قَالَتْ: فَإِنِّي أَتَكَشَّفُ فَادْعُ اللهَ أَنْ لَا أَتَكَشَّفَ، فَدَعَا لَهَا.متفق عليه
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "சோதனையின் பரப்புக்கேற்ப்பவே கூலியின் பரப்பும் இருக்கும். அல்லாஹ் ஒரு கூட்டத்தை நேசித்தால் அவர்களை சோதிப்பான், அதனைப் பொருந்திக் கொண்டவருக்குப் பொருத்தமுள்ளது, கோபித்தவருக்குக் கோபமுள்ளது".இதனை இப்னு மாஜா பதிவு செய்துள்ளார் - இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் : ஒரு நாள் நான் நபி (ஸல்) அவர்களின் பின்னால் அமர்ந்திருந்தேன்.! அப்போது அவர்கள் என்னிடம் சிறுவனே! நான் சில அறிவுரைகளைக் கற்றுத் தருகின்றேன் என்று சொன்னார்கள்: நீ அல்லாஹ்வை பாதுகாத்துக்கொள். அவன் உன்னைப் பாதுகாப்பான். நீ அல்லாஹ்வை பாதுகாத்துக்கொள். அவனை உனக்கு முன் கண்டுகொள்வாய். நீ கேட்டால் அல்லாஹ்விடமே கேள். உதவி தேடினால் அல்லாஹ்விடமே தேடு. அறிந்து கொள்! ஒட்டுமொத்த சமூகமும் ஒன்று திரண்டு உனக்கு ஏதாவது நன்மை செய்திட முயன்றாலும் உனக்கு அல்லாஹ் ஏற்கனவே ஏற்படுத்தி வைத்துள்ளதைக் காட்டிலும் அதிகமாக எந்த நன்மையையும் அவர்களால் செய்திட முடியாது. இன்னும் ஒட்டுமொத்த சமூகமும் ஒன்று திரண்டு உனக்கு ஏதாவது தீங்கிழைக்க முயன்றாலும் அல்லாஹ் உனக்கு ஏற்கனவே குறித்து வைத்தவற்றைக் கொண்டல்லாமல் எந்தக் தீங்கையும் அவர்களால் செய்திட முடியாது. பேனாக்கள் உயர்த்தப்பட்டு விட்டன. ஏடுகள் காய்ந்து விட்டன.இதனை இமாம் திர்மிதி பதிவு செய்துள்ளார்
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُؤْمِنُ الْقَوِيُّ، خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللهِ مِنَ الْمُؤْمِنِ الضَّعِيفِ، وَفِي كُلٍّ خَيْرٌ، احْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ، وَاسْتَعِنْ بِاللهِ وَلَا تَعْجَزْ، وَإِنْ أَصَابَكَ شَيْءٌ، فَلَا تَقُلْ لَوْ أَنِّي فَعَلْتُ كَانَ كَذَا وَكَذَا، وَلَكِنْ قُلْ قَدَرُ اللهِ وَمَا شَاءَ فَعَلَ، فَإِنَّ (لَوْ) تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ».رواه مسلم
عن أبي عزة الهذلي رضي الله عنه قال قال رسول الله صلى الله وسلم: «إذا أراد اللهُ قَبْضَ عبد بأرض جعلَ له بها حاجة».رواه الترمذي وأحمد وأبو داود الطيالسي
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக அப்துல்லாஹ் இப்னு அம்ர்ருப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் 'அல்லாஹ், வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, படைப்பினங்களின் விதிகளை எழுதி விட்டான். (அப்போது) அவனது அரியணை (அர்ஷ்) தண்ணீரின் மேல் இருந்தது'இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ اللَّهَ قَالَ: إِذَا ابْتَلَيْتُ عَبْدِي بِحَبِيبَتَيْهِ فَصَبَرَ، عَوَّضْتُهُ مِنْهُمَا الجَنَّةَ» يُرِيدُ: عَيْنَيْهِ.رواه البخاري