Hadith for the World
நபியவர்களின் நேரக வர்ணனை

நபி வழி

7 hadiths

7 hadiths

உம்முல் முஃமினீன ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், தாம் காலணி அணிந்து கொள்ளும் போதும் தலைவாரிக் கொள்ளும் போதும் சுத்தம் செய்யும் போதும் தம் அனைத்து வேலைகளிலும் வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள்.இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இரவில் (உறங்கி) எழுந்ததும் பல் துலக்கு(ம் குச்சியால் தமது வாயைக் கழுவி சுத்தம் செய்)வார்கள்.இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் (ஒருமுறை) என்னிடம் பதற்றத்துடன் வந்து, 'அல்லாஹ் வைத் தவிர வேறு இறைவனில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத்தால் அரபியருக்குக் கேடு நேரவிருக்கின்றது. இன்று யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடைச் சுவர் இதைப் போல் திறக்கப்பட்டுவிட்டது' என்று தம் கட்டை விரலையும் அதற்கடுத்துள்ள விரலையும் இணைத்து வளையமிட்டுக் காட்டியபடி கூறினார்கள். அப்போது நான், 'அல்லாஹ்வின் தூதரே! நம்மிடையே நல்லவர்கள் இருக்க, நாம் அழிந்துவிடுவோமா?' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'ஆம்; தீமை பெருகிவிட்டால்...' என்று பதிலளித்தார்கள்.இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
عن عائشة رضي الله عنها قالت: كان رسولُ اللهِ صلى الله عليه وسلم إذا فَاتَتْهُ الصَّلَاةُ مِنَ الليلِ مِن وَجَعٍ أَوْ غَيْرِهِ، صَلَّى من النَّهَارِ ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً.رواه مسلم
அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்ள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் இரகசியமான வணக்க வழிபாடுகள் குறித்து வினவினார்கள். அது பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோது, அவர்களில் ஒருவர், ''நான் பெண்களைவிட்டு ஒதுங்கி யிருக்கப் போகிறேன். ஒருபோதும் மணமுடித்துக்கொள்ளமாட்டேன்' என்று கூறினார். இன்னொருவர், ''நான் ஒரு போதும் இறைச்சி சாப்பிடமாட்டேன் ' என்று கூறினார். மூன்றாம் நபர் நான் படுக்கையில் தூங்க மாட்டேன் என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,அல்லாஹ்வை புகழ்ந்து துதி செய்து விட்டு (அந்தத் தோழர்களிடம்) வந்து, ''இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொள்வதற்கு இவர்களுக்கு என்ன நேர்ந்து விட்டது! (அறிந்து கொள்ளுங்கள்) என்னைப் பொறுத்தவரை நான் (இரவில்) தொழவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன், மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் புறக்கணித்து நடக்கிராரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்' என்று கூறினார்கள்.இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: إِنَّ خَيَّاطًا دَعَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِطَعَامٍ صَنَعَهُ، قَالَ أَنَسُ بْنُ مَالِكٍ: فَذَهَبْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى ذَلِكَ الطَّعَامِ، فَقَرَّبَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خُبْزًا وَمَرَقًا، فِيهِ دُبَّاءٌ وَقَدِيدٌ، فَرَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَتَبَّعُ الدُّبَّاءَ مِنْ حَوَالَيِ القَصْعَةِ، قَالَ: فَلَمْ أَزَلْ أُحِبُّ الدُّبَّاءَ مِنْ يَوْمِئِذٍ.متفق عليه
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قِيلَ: يَا رَسُولَ اللهِ ادْعُ عَلَى المُشْرِكِينَ قَالَ: «إِنِّي لَمْ أُبْعَثْ لَعَّانًا، وَإِنَّمَا بُعِثْتُ رَحْمَةً».رواه مسلم