Topicநபியவர்களின் வாழ்க்கையும் வரலாறும்
38 hadiths
38 hadiths
அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்ள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் இரகசியமான வணக்க வழிபாடுகள் குறித்து வினவினார்கள்.
அது பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோது,
அவர்களில் ஒருவர், ''நான் பெண்களைவிட்டு ஒதுங்கி யிருக்கப் போகிறேன். ஒருபோதும் மணமுடித்துக்கொள்ளமாட்டேன்' என்று கூறினார்.
இன்னொருவர், ''நான் ஒரு போதும் இறைச்சி சாப்பிடமாட்டேன் ' என்று கூறினார். மூன்றாம் நபர் நான் படுக்கையில் தூங்க மாட்டேன் என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,அல்லாஹ்வை புகழ்ந்து துதி செய்து விட்டு (அந்தத் தோழர்களிடம்) வந்து, ''இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொள்வதற்கு இவர்களுக்கு என்ன நேர்ந்து விட்டது! (அறிந்து கொள்ளுங்கள்) என்னைப் பொறுத்தவரை நான் (இரவில்) தொழவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன், மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் புறக்கணித்து நடக்கிராரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்' என்று கூறினார்கள்.இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்