Hadith for the World
Tap the image to view it full size
பிக்ஹும் அதன் அடிப்படைகளும்

இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள் :

Available in 58 languages
«இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நேர்ச்சை செய்ய வேண்டாமென்று தடை விதித்தார்கள். நோர்ச்சையானது (அல்லாஹ் விதித்தவை தவிர) எந்த நன்மையையும் கொண்டு வரமாட்டாது. இதனால் கஞ்சர்களிடமிருந்து (செல்வம்) வெளியே கொண்டு வரப்படும் (என்பதைத் தவிர வேறு பயன் இல்லை).»

Meaning translation ·

Explanation

The meaning in a few plain lines

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நேர்ச்சை செய்வதை தடைசெய்தார்கள். நேர்ச்சை என்பது மார்க்கரீதியாக கட்டாயப்படுத்தாத ஒன்றை தான் செய்வதாக ஒருவர் தன்மீது கடமையாக்கிக்கொள்ளும் ஒரு விடயமாகும். தொடர்ந்து நபியவர்கள் குறிப்பிடுகையில் : நேர்ச்சையானது அல்லாஹ் விதித்த எதனையும் முற்படுத்தவோ பிற்படுத்தவோ மாட்டாது. மாறாக தனக்குத் தேவையானதை மாத்திரமே செய்யும் கஞ்சனின் செல்வத்தை மாத்திரமே அது வெளிப்படுத்துகிறது. மொத்தத்தில் நேர்ச்சையானது அல்லாஹ் ஏற்கனவே நிர்ணயித்த –விதித்தத் தவிர எதனையும் கொண்டு வரப் போவதில்லை.

Source
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
Download image

Saved at original quality