Hadith for the World
Tap the image to view it full size
பிக்ஹும் அதன் அடிப்படைகளும்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹுஅறிவித்துள்ளார்கள்:

Available in 60 languages
«நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹுஅறிவித்துள்ளார்கள்: '(தொழுகையில்) உங்களது அணிகளை சீர் செய்து கொள்ளுங்கள்,ஏனெனில் அணியை சீர் செய்து கொள்வதிலேயே தொழுகையின் பூரணத்துவம் தங்கியுள்ளது.»

Meaning translation ·

Explanation

The meaning in a few plain lines

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்; அவர்கள் கூட்டாகத் தொழக்கூடியவர்களுக்கு தங்களது அணிகளை சீர் செய்து கொள்ளுமாறு பணிப்பார்கள். அவர்களில் ஒருவர் மற்றொரு வரை முந்தி நிற்காது அணியைச் சீர் செய்து கொள்ளுமாறும் பணிப்பார்கள். மேலும்; அணியை சீர் செய்து கொள்வதில் தொழுகையின் பூரணத்துவம் தங்கியுள்ளது. அணி வளைந்து கோணலாக இருப்பது தொழுகையில் ஒரு வகை முறைகேட்டையும் குறையையும் ஏற்படுத்திவிடும். .

Source
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
Download image

Saved at original quality