Hadith for the World
Tap the image to view it full size
சிறப்புக்களும் ஒழுக்கங்களும்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்:

Available in 65 languages
«நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், பெற்றோரை துன்புறுத்தல், கொலை செய்தல், பொய் சத்தியம் செய்தல் ஆகியவை பெரும் பாவங்களாகும்'.»

Meaning translation ·

Explanation

The meaning in a few plain lines

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பெரும்பவாங்கள் பற்றி தெளிவுபடுத்துகிறார்கள்; அவற்றை செய்பவன் இம்மை அல்லது மறுமையில் கடுமையான எச்சரிக்கைக்கு உட்படுவான். அவற்றுள் முதலாவது : அல்லாஹ்வுக்கு இணைவைப்பதாகும் : இதன் கருத்து ; வணக்க வழிபாடுகளில் ஏதாவது ஒன்றை அல்லாஹ் அல்லாதவருக்கு செலுத்துதல், உலூஹிய்யா ருபூபிய்யா,அல்அஸ்மாஉ வஸ்ஸிபாத் -(அல்லாஹ்வின் அழகிய நாமங்களும் பண்புகளும்) போன்ற விடயங்களில் அல்லாஹ் தனக்கென தனித்துவமாக பெற்றிருக்கும் விடயங்களில் ஏதாவது ஒன்றை அல்லாஹ் அல்லாதோரும் பெற்றுள்ளனர் என சமப்படுத்துவதினை குறிக்கும். இரண்டாவது : ' பெற்றோரைத் துன்புறுத்துதல் நோவினை செய்தல்': என்பது சொல் மற்றும் செயல் ரீதியான அனைத்து விடயங்கள் மூலமும் பெற்றோரை துன்புறுத்துவதையும் அவர்களுக்கு உபகாரம் செய்யாதிருத்தலையும் குறிக்கிறது. மூன்றாவது : எவ்வித நியாயமான காரணமுமில்லாது அநியாயமாகவும், அத்துமீறியும் ஒருவரை கொலை செய்தல். நான்காவது : பொய் சத்தியம் என்பது ' பொய்யென்று தெரிந்துகொண்டே ஒரு விவகாரம் சம்பந்தமாக பொய்யாக சத்தியம் செய்தலைக் இது குறிக்கிறது. 'அல் யமீனுல் கமூஸ்' என இச்சத்தியம் அழைக்கப்படக் காரணம் குறித்த நபரை இந்த சத்தியமானது பாவத்தில் அல்லது நரகில் தள்ளிவிடுவதினலாகும்.

Source
இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்
Download image

Saved at original quality