Hadith for the World
உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள்

பாவங்களைக் கண்டித்தல்

6 hadiths

6 hadiths

அபூபக்ரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'பாவங்களில் மிகப்பெரியது குறித்து உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா?' என்று மூன்று முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தோழர்களிடம் கேட்டார்கள். அதற்கு அவர்கள்; 'ஆம் அல்லாஹ்வின் தூதரவர்களே!' எனக் கூறினார்கள். அப்போது, 'அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், பெற்றோரைத் துன்புறுத்தல்' என்று கூறினார்கள். பின்னர் சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, 'அறிந்து கொள்ளுங்கள்; பொய் பேசுவதும், (மிகப் பெரிய பாவம்தான்)' என்று கூறினார்கள். இந்த வார்த்தையை கூறுவதை நிறுத்த மாட்டார்களா ? என்று நாம் கூறும் அளவுக்கு அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள்.இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், பெற்றோரை துன்புறுத்தல், கொலை செய்தல், பொய் சத்தியம் செய்தல் ஆகியவை பெரும் பாவங்களாகும்'.இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மூஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : ((நல்ல நண்பன் மற்றும் கெட்ட நண்பனின் நிலையானது கஸ்தூரியைச் சுமக்கின்றவனின் நிலையையும், கொல்லனின்; நிலையையும் ஒத்திருக்கிறது. கஸ்தூரியைச் சுமப்பவன் ஒன்று அதை உனக்கு அன்பளிப்பாக வழங்கலாம். அல்லது நீ அவனிடமிருந்து (அதை விலைக்கு) வாங்கிக்கொள்ளலாம். அல்லது அதிலிருந்து நீ நறுமணத்தையேனும் பெறலாம். ஆனால், (உலை ஊதுபவனோ) கொல்லனோ ஒன்று உனது ஆடையை எரித்துக் கரித்து விடுவான்; அல்லது (அவனிடமிருந்து) நீ துர்வாடையையாவது அடைந்தே தீருவாய்.இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக -அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : அழித்தொழிக்கும் (பெரும் அழிவைத் தரும்) ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்திருங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். அதற்கு அவர்கள் (ஸஹாபாக்கள்) 'இறைத்தூதர் அவர்களே! அவை எவை?' என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அநாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்) என்று (பதில்) கூறினார்கள்.இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
என் சமூகத்தினர் அனைவரும் மன்னிக்கப்படுவர்.எனினும் தன் குற்றத்தை அம்பலப்படுத்தியவர்களைத் தவிர.இரவு காலத்தில் பாவ காரியம் ஒன்றைச் செய்த மனிதனின் தவறை அல்லாஹ் மறைத்து வைத்த போது அவன் காலையில் எழுந்ததும்,:இன்னவனே நான் நேற்றிரவு இப்படியெல்லாம் செய்தேன்,என்று அல்லாஹ் மறைத்து வைத்த தன்னுடைய தவறை அவன் காலையில் எழுந்ததும் இப்படி வெளிப்படுத்துவானாகில்,அது தன் தவறை அம்பலப்படுத்துதலாகும்.என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என அபூ ஹுராரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது
عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال: «لعن الله السارق، يسرق البَيْضَةَ فَتُقْطَعُ يده، ويسرِقُ الحَبْلَ فَتُقْطَعُ يَدُهُ».متفق عليه