Hadith for the World
உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள்

உளச் செயற்பாடுகள்

14 hadiths

14 hadiths

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் மறுமை நாளைப் பற்றி, மறுமை நாள் எப்போது வரும்? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், அதற்காக நீ என்ன (நற்செயல்களைத்) தயார் செய்து வைத்திருக்கிறாய்? என்று (திருப்பிக்) கேட்டார்கள். அம்மனிதர், 'எதுவுமில்லை'. எனினும் நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் என்று பதிலளித்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நீ நேசித்தவர்களுடன்தான் (மறுமையில்) நீ இருப்பாய்' என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், 'நீ நேசித்தவர்களுடன் நீ இருப்பாய்' என்று சொன்னதைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்று வேறு எதனாலும் நாங்கள் மகிழ்ச்சியடைந்ததில்லை. நான் நபி (ஸல்) அவர்களையும் அபூபக்ர் (ரழி) அவர்களையும் உமர் (ரழி) அவர்களையும் நேசிக்கிறேன். மேலும், அவர்களை நேசித்த காரணத்தால் (மறுமையில்) அவர்களுடன்தான் இருப்பேன் என்று நான் நம்புகிறேன். அவர்களுடைய நற்செயல்களைப் போன்று நான் நற்செயல் புரியாவிட்டாலும் சரியே!.இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'தூய்மையும்; உயர்வும் மிக்க அல்லாஹ் கூறினான்: நான் இணையாளர்களைவிட்டும் இணை கற்பித்தலைவிட்டும் அறவே தேவையற்றவன். யாரேனும் என்னுடன் பிறரையும் இணையாக்கி (எனக்காகவும் பிறருக்காகவும்) நற்செயல் புரிந்தால், அவனையும் அவனது இணைவைப்பையும் (தனியே) விட்டுவிடுவேன்'.இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தமது மரணத்திற்கு மூன்று தினங்களுக்கு முன்னர் கூறுவதை தான் செவிமடுத்ததாக ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள் : உங்களில் எவரும் அல்லாஹ்வைப் பற்றிய நல்லெண்ணம் கொண்ட நிலையிலேயே தவிர மரணிக்கவேண்டாம்.இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம், நன்மையையும், பாவத்தையும் பற்றிக் கேட்டேன். அதற்கு நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள்: 'நன்மை என்பது நற்குணமாகும். பாவம் என்பது உனது உள்ளத்தில் குறுகுறுப்பை ஏற்படுத்தும். மக்கள் அதைக் காண்பதை நீ வெறுப்பாய்.இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'நிச்சயமாக அல்லாஹ் உங்களது தோற்றங்களையோ, செல்வங்களையோ பார்க்க மாட்டான், இருப்பினும் உங்களது உள்ளங்களையும், செயல்களையுமே பார்க்கின்றான்.'இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'செயல்கள் அனைத்தும் எண்ணத்தைக் கொண்டே அமைகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் தாம் எண்ணியதற்கேட்பவே கூலி கிடைக்கிறது. ஆகவே ஒருவர் இறைவனுக்காகவும் அவனது திருத்தூதருக்காகவும் ஹிஜ்ரத் செய்வாரேயானால் அது அல்லாஹ்வுக்காகவும் அவனது திருத்தூதருக்காகவுமே இருக்கும். ஒருவர் ஹிஜ்ரத் செய்வது சில உலக இலாபங்களுக்காக என்றால், அல்லது ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதற் காகத்தான் என்றால் அவர் அதற்கான பலனையே அடைவார். இமாம் புஹாரியின் அறிவிப்பில் ' செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும்; தாம் எண்ணியதற்கேட்பவே கூலி கிடைக்கிறது' என்று இடம்பெற்றுள்ளது.இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُؤْمِنُ الْقَوِيُّ، خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللهِ مِنَ الْمُؤْمِنِ الضَّعِيفِ، وَفِي كُلٍّ خَيْرٌ، احْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ، وَاسْتَعِنْ بِاللهِ وَلَا تَعْجَزْ، وَإِنْ أَصَابَكَ شَيْءٌ، فَلَا تَقُلْ لَوْ أَنِّي فَعَلْتُ كَانَ كَذَا وَكَذَا، وَلَكِنْ قُلْ قَدَرُ اللهِ وَمَا شَاءَ فَعَلَ، فَإِنَّ (لَوْ) تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ».رواه مسلم
عَنْ عِيَاضِ بْنِ حِمَارٍ أَخِي بَنِي مُجَاشِعٍ رَضيَ اللهُ عنه قَالَ: قَامَ فِينَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ خَطِيبًا، فَقَالَ: وَسَاقَ الْحَدِيثَ وَفِيهِ: «وَإِنَّ اللهَ أَوْحَى إِلَيَّ أَنْ تَوَاضَعُوا حَتَّى لَا يَفْخَرَ أَحَدٌ عَلَى أَحَدٍ، وَلَا يَبْغِي أَحَدٌ عَلَى أَحَدٍ».رواه مسلم
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'உங்களில் ஒருவருக்கு தனது பெற்றோர்; தனது குழந்தை, ஏனைய மனிதர்கள் அனைவரையும் விட நான் அதிக நேசத்திற்குரியவராக ஆகும்வரையில் அவர் (உண்மையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்'.இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
عن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال: «النَّاسُ مَعَادِن كَمَعَادِن الذَّهَب وَالفِضَّة، خِيَارُهُم فِي الجَاهِلِيَّة خِيَارُهُم فِي الإِسْلاَم إِذَا فَقُهُوا، والأَرْوَاحُ جُنُودٌ مُجَنَّدَة، فَمَا تَعَارَفَ مِنْهَا ائتَلَفَ، وَمَا تَنَاكَرَ مِنْهَا اخْتَلَفَ». وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله -صلى الله عليه وسلم: «تَجِدُون النَّاسَ مَعَادِن: خِيَارُهُم فِي الجَاهِليَّة خِيَارُهُم فِي الإِسْلاَم إِذَا فَقِهُوا، وَتَجِدُون خِيَار النَّاس فِي هَذَا الشَّأْن أَشَدُّهُم كَرَاهِيَة لَه، وَتَجِدُون شَرَّ النَّاس ذَا الوَجْهَين، الَّذِي يَأْتِي هَؤُلاَء بِوَجه، وَهَؤُلاَء بِوَجْه».الحديث الأول: متفق عليه، ولفظه لمسلم؛ وروى البخاري أوله، وروى آخره عن عائشة -رضي الله عنها-. الحديث الثاني: متفق عليه
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அகீம் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "பாதுகாப்பிற்காக யார் ஒரு பொருளைத் தொங்க விடுகிறாரோ அதன் பக்கமே அவர் சாட்டப்பட்டு விடுவார்".இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார் - இதனைஅஹ்மத் பதிவு செய்திருக்கிறார்
عن ابن عباس حسبنا الله ونعم الوكيل: «قالها إبراهيم عليه السلام حين أُلقي في النار، وقالها محمد صلى الله عليه وسلم حين قالوا: {إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا، وقالوا: حسبنا الله ونعم الوكيل} [آل عمران: 173]».رواه البخاري
عن جابر قال: قال رسول الله صلى الله عليه وسلم: «إذا قضى أحدكم الصلاة في مسجده فليجعل لبيته نصيبًا من صلاته، فإن الله جاعلٌ في بيته من صلاته خيرًا».رواه مسلم
عَنْ أُمِّ سَلَمَةَ أُمِّ المؤْمنينَ رَضيَ اللهُ عنها أَنَّهَا قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ: «مَا مِنْ مُسْلِمٍ تُصِيبُهُ مُصِيبَةٌ فَيَقُولُ مَا أَمَرَهُ اللهُ: {إِنَّا لِلهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ} [البقرة: 156]، اللَّهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي، وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا، إِلَّا أَخْلَفَ اللهُ لَهُ خَيْرًا مِنْهَا»، قَالَتْ: فَلَمَّا مَاتَ أَبُو سَلَمَةَ قُلْتُ: أَيُّ الْمُسْلِمِينَ خَيْرٌ مِنْ أَبِي سَلَمَةَ؟ أَوَّلُ بَيْتٍ هَاجَرَ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم، ثُمَّ إِنِّي قُلْتُهَا، فَأَخْلَفَ اللهُ لِي رَسُولَ اللهِ صلى الله عليه وسلم.رواه مسلم