Hadith for the World
Tap the image to view it full size
பிக்ஹும் அதன் அடிப்படைகளும்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :

Available in 54 languages
«நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : அடியார்கள் காலையை அடையும் ஒவ்வொரு நாளிலும், இரு மலக்குகள் இறங்கி, ஒருவர் "யா அல்லாஹ்! தர்மம் கொடுப்பவருக்கு பதிலாக மேலும் கொடுப்பாயாக" என்றும், மற்றவர், "யா அல்லாஹ்! தர்மம் செய்யாமல் வைத்துக்கொள்பவருக்கு அழிவைக் கொடுப்பாயாக" எனவும் பிரார்த்திப்பார்கள்.»

Meaning translation ·

Explanation

The meaning in a few plain lines

சூரியன் உதிக்கும் ஒவ்வொரு நாளிலும் இரு மலக்குகள் இறங்கி பிரார்த்திப்பார்கள் என நபியவர்கள் கூறுகின்றார்கள். ஒருவர் இவ்வாறு கூறுவார்: "யா அல்லாஹ்! வணக்கங்களுக்காகவும், குடும்பத்திற்காகவும், விருந்தாளிகளுக்காகவும், உபரியான நற்கருமங்களுக்காகவும் செலவழிப்பவர்களுக்கு அவற்றை விடச் சிறந்த ஒன்றைப் பதிலாக வழங்கி, அவருக்கு அபிவிருத்தியை ஏற்படுத்துவாயாக" மற்றவர் இவ்வாறு கூறுவார்: செலவழிக்காமல் வைத்துக் கொள்பவருக்கு அழிவைக் கொடுப்பாயாக! உரியவர்களுக்குக் கொடுக்காமல் தடுத்துக்கொண்ட அவரது சொத்தை அழித்துவிடுவாயாக!

Source
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
Download image

Saved at original quality