சிறப்புக்களும் ஒழுக்கங்களும்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் :
Available in 70 languages
«நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : (ஒரு முறை) நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் (எங்களிடம்), 'புறம் பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள், 'இது குறித்து அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்' என்று பதிலளித்தனர். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'நீர் உம்முடைய சகோதரரைப் பற்றி அவர் விரும்பாத ஒன்றைக் கூறுவதாகும்' என்று பதிலளித்தார்கள். அப்போது, 'நான் சொல்லும் குறை என் சகோதரரிடம் இருந்தாலுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், 'நீர் சொல்லும் குறை உம்முடைய சகோதரரிடம் இருந்தால், நீர் அவரைப் பற்றிப் புறம் பேசிவிட்டீர். நீர் சொன்ன குறை அவரிடம் இல்லாவிட்டால், நீர் அவரைப் பற்றி அவதூறு கூறிவிட்டீர் என்றார்கள்.»Meaning translation ·
Saved at original quality








