Hadith for the World
கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான பிக்ஹ்

உடன்படிக்கையும் பாதுகாப்பு வழங்குவதன் சட்டங்கள்

2 hadiths

2 hadiths

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'அயலவரும் வாரிசுதாரராக ஆகி விடுவாரோ என நான் எண்ணுமளவிற்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அயலவர் -அண்டைவீட்டார் குறித்து எனக்கு உபதேசித்துக் கொண்டே இருந்தார்கள்'.இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஷுரைஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் ஈமான் கொள்ள மாட்டான். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் ஈமான் கொள்ளமாட்டான். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் ஈமான் கொள்ள மாட்டான் என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், 'அவன் யார்? அல்லாஹ்வுடைய தூதரே!' எனக் கேட்கப்பட்ட போது, 'எவனுடைய தீமைகளை விட்டும் அண்டைவீட்டான் அபயம் பெற வில்லையோ அவன் தான்' என்று கூறினார்கள்.இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்