Hadith for the World
பிரார்த்தனைகள் திக்ருகளின் சட்டங்கள்

பள்ளிவாயிலினுள் நுழையும் போதும் அங்கிருந்து வெளியேறும் போதும் ஒத வேண்டிய திக்ருகள்

2 hadiths

2 hadiths

அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளிக்குள் நுழையும் போது : ''அஊது பில்லாஹில் அழீம் வபிவஜ்ஹிஹில் கரீம் வஸுல்தானிஹில் கதீம் மினஷ் ஷைய்தானிர் ரஜீம்'' என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்;. இதனை நபியவர்கள் கூறினார்களா? என்று கேட்டதற்கு ஆம் என்று நான் கூறினேன். இந்தப் பிரார்த்தனையை கூறினால் இந்நாள் முழுவதும் என்னிடமிருந்து பாதுகாப்புப் பெறுகிறான் என்று ஷைத்தான் கூறுகிறான். திக்ரின் பொருள் : மகத்துவம் கொண்ட அல்லாஹ்வைக் கொண்டும், அவனது அழகிய திருமுகத்தைக் கொண்டும்,நிலையான மேலாதிக்கத்தைக் கொண்டும், விரட்டப்பட்ட ஷைத்தானின் தீங்கை விட்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன்.இதனை இமாம் அபூதாவுத் பதிவு செய்துள்ளார்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுமைத் அல்லது அபூ உஸைத் அறிவிக்கிறார்: உங்களில் ஒருவர் பள்ளிக்குள் (மஸ்ஜிதினுள்) நுழைகையில் 'அல்லாஹும்மப்பதஹ்லீ அப்வாப ரஹ்மதிக' என்று கூறட்டும். (யா அல்லாஹ் உனது அருளின் வாயில்களை எனக்கு திறந்து தருவாயாக). அவர் பள்ளியிலிருந்து வெளியேறும் போது 'அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் பழ்லிக' என்று கூறட்டும். (யா அல்லாஹ் நான் உனது அருளை வேண்டுகிறேன்').இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்