Hadith for the World
மார்க்க ரீதியான நிர்வாகம்

நாட்டுத் தலைவரின் கடமைகள்

1 hadiths

1 hadiths

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கிறர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தடித்த விளிம்புகளைக் கொண்ட நஜ்ரான் நாட்டு சால்வையொன்றை போர்த்தியிருக்க நான் அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது அவர்களை கிராமவாசி ஒருவர் கண்டு அவர்களின் சால்வையால் அவர்களைக் கடுமையாக இழுத்தார் எந்த அளவிற்கென்றால், அவர் கடுமையாக இழுத்த காரணத்தால் சால்வை விளிம்பின் அடையாளம் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோளின் ஒரு பக்கத்தில் பதிந்திருப்பதைக் கண்டேன். பிறகு அந்தக் கிராமவாசி, 'முஹம்மதே! உங்களிடமிருக்கும் இறைவனின் செல்வத்திலிருந்து எனக்கும் கொடுக்கும்படி கட்டளை இடுங்கள்' என்றார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவர் பக்கம் திரும்பிச் சிரித்தார்கள். அவருக்குக் கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள்இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது