Hadith for the World
தொழுகை

தொழுகையின் அவசியமும் அதனை விட்டுவிடுபவருக்கான சட்டமும்

5 hadiths

5 hadiths

عن عمرو بن شُعيب عن أبيه عن جدِّه قال: قال رسولُ الله صلى الله عليه وسلم: «مُرُوا أولادكمِ بالصلاةِ وهم أبناءُ سبعِ سِنينَ، واضرِبوهم عليها وهم أبناءُ عَشرٍ، وفرِّقوا بينهم في المَضاجِعِ».رواه أبو داود
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக புரைதா இப்னுல் ஹஸீப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : அஸ்ர் தொழுகையை நேர காலத்துடன் நிறைவேற்றுங்கள், ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'யார் அஸ்ர் தொழுகையை விட்டுவிடுகிறானோ அவனின் நற்செயல்கள் அழிந்து விடும்'.இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா கூறுகின்றார்கள் : 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாழானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து தூண்கள் மீது இஸ்லாம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது'இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'யார் ஒரு கடமையான தொழுகையை நிறைவேற்ற மறந்துவிடுகிறாரோ அவர் அதனை ஞாபகம் வந்ததும் தொழுது கொள்ளட்டும்; அதற்கான குற்றப்பரிகாரம் அதனைத்தவிர வேறுஒன்றுமில்லை (என்னை நினைவு படுத்த தொழுகையை நிலைநாட்டுவீராக,) (தாஹா :14)இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுவதை தான் செவிமடுத்ததாக ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள் : 'நிச்சயமாக ஒரு (முஸ்லிம்) அடியானுக்கும்; இணைவைப்பிற்கும் இறைநிராகரிப்பிற்கும் இடையிலான வித்தியாசம் தொழுகையை விடுவதாகும் '.இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்