Hadith for the World
Topic

சிறப்புக்களும் ஒழுக்கங்களும்

288 hadiths

288 hadiths

அபூ ஹுரைரா ரழி அவர்கள் அறிவிக்கிறார்கள் "ஒரு அடியான் (நல்லதா,கெட்டதா என) சிந்திக்காமல் பேசுகிறான். அதன் மூலம் அவன் கிழக்குக்கும் மேற்குக்குமிடையே உள்ள மிகத்தூரமான அளவுக்கு நரகில் வீழ்வான்" என நபி (ஸல்) கூறினார்கள்.இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது
عن عبد الله بن عمر رضي الله عنهما أَنَّ رَجُلاً مِنَ الأعرَاب لَقِيهَ بِطَريق مَكَّة، فَسَلَّم عَلَيه عَبد الله بنُ عمر، وَحمَلهُ على حمار كان يركَبُهُ، وَأعطَاه عِمَامَة كَانت على رأسه، قال ابن دينار: فقُلنا له: أَصْلَحَك الله، إنَّهم الأعراب وهُم يَرْضَون بِاليَسِير، فقال عبدُ الله بنَ عُمر: إِنَّ أَبَا هَذَا كَانَ وُدًّا لِعُمر بنِ الخطَّاب رضي الله عنه وإنِّي سَمِعت رسول الله صلى الله عليه وسلم يقول: «إِنَّ أَبَرَّ البِرِّ صِلَةُ الرَّجُل أَهْلَ وُدِّ أَبِيه». وفي رواية عن ابن دينار، عن ابن عمر: أنَّه كان إذَا خَرَج إلى مكة كان له حمار يَتَرَوَّحُ عليه إذا ملَّ رُكُوبَ الرَّاحِلة، وَعِمَامة يَشُدُّ بها رأسه، فَبينَا هو يومًا على ذلك الحمار إِذْ مَرَّ بِهِ أَعْرَابِي، فقال: أَلَسْتَ فُلاَن بنَ فُلاَن؟ قال: بَلَى. فَأَعْطَاهُ الحِمَار، فقال: ارْكَب هَذَا، وَأَعْطَاهُ العِمَامَةَ وَقَالَ: اشْدُدْ بِهَا رَأْسَكَ، فَقَالَ لَهُ بَعض أصحَابِه: غفر الله لك أَعْطَيت هذا الأعرابي حمارا كنت تَرَوَّحُ عليه، وعِمَامَة كُنتَ تشدُّ بها رأسَك؟ فقال: إِنِّي سمِعت رسول الله صلى الله عليه وسلم يقول: «إِنَّ مِنْ أَبَرِّ البِّر أَنْ يَصِلَ الرَّجُلُ أَهْلَ وُدَّ أَبِيهِ بَعْدَ أَنْ يُوَلِّيَ» وَإِنَّ أَبَاه كان صَدِيقًا لِعُمَرَ رضي الله عنه .رواه مسلم
عن أنس بن مالك رضي الله عنه مرفوعًا: «من قال -يعني: إذا خَرج من بَيتِه-: بِسم الله تَوَكَّلتُ على اللهِ، وَلاَ حول ولا قُوَّة إِلَّا بالله، يُقَال له: هُدِيتَ وَكُفِيتَ وَوُقِيتَ، وَتَنَحَّى عَنه الشَّيطَان». زاد أبو داود: «فيقول -يعني: الشيطان- لِشَيطان آخر: كَيف لَك بِرَجلٍ قَد هُدِيَ وكُفِيَ ووُقِيَ؟».رواه أبو داود والترمذي
عن معاذ بن جبل رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه قال: «قَالَ اللهُ -عَزَّ وجَلَّ-: المُتَحَابُّون فِي جَلاَلِي، لَهُم مَنَابِرُ مِن نُورٍ يَغْبِطُهُم النَبِيُّونَ والشُهَدَاء».رواه الترمذي وأحمد
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : உங்களில் ஒருவர் தனது சகோதரனைச் சந்தித்தால் ஸலாம் சொல்லட்டும். அவர்களுக்கு மத்தியில், ஒரு மரமோ, சுவரோ, கல்லோ பிரித்து, பின்னர் சந்தித்தாலும் ஸலாம் சொல்லட்டும்.இதனை இமாம் அபூதாவுத் பதிவு செய்துள்ளார்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுவதைத் தான் கேட்டதாக ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : 'திக்ரில் சிறந்தது லாஇலாஹ இல்லல்லாஹ் (لا إله إلا الله) என்பதாகும். துஆவில் சிறந்தது அல்ஹம்து லில்லாஹ் ( الحمد لله) என்பதாகும்.இதனை இமாம்களான திர்மிதி, குப்ரா எனும் நூலில் நஸாஈ, இப்னுமாஜா ஆகியோர் பதிவு செய்துள்ளார்கள்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹூரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்: அல்லாஹ் உங்களது தவறுகளை அழித்து, அந்தஸ்த்துக்களை உயர்த்தக்கூடிய ஒரு விடயத்தை காட்டித் தரட்டுமா? என நபியவர்கள் கேட்டதற்கு,ஸஹாபாக்கள்: ஆம் யாரஸுலல்லாஹ் என்றார்கள். அதற்கு நபியவர்கள்: சிரமமான நிலையிலும் வுழுவை நிரப்பமாக செய்தல், பள்ளிவாயிலுக்கு அதிகம் நடந்து செல்லுதல், ஒரு தொழுகைக்குப் பின்னர் இன்னோர் தொழுகையை எதிர்பார்த்திருத்தல் என்பனதான் அவை. உண்மையில் அவை அல்லாஹ்வின் பாதையில் எல்லைக் காவல் புரிவதாகும்.'இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
அபூதர்தா ரழியல்லாஹு அன்ஹூ நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியதாக கூறினார்கள் : நான் உங்களுக்கு ஒர் அமலை காண்பித்துதரவா ? அது உங்களின் எல்லா அமல்களைவிடவும் சிறந்தது. உங்கள் அதிபதியிடம் அது மிகவும் தூய்மையானது. உங்கள் அந்தஸ்த்தை மிகவும் அதிகப்படுத்தக்கூடியது. தங்கம் வெள்ளியை செலவளிப்பதை விடவும் உங்களுக்குச் சிறந்தது. மட்டுமல்ல, நீங்கள் உங்கள் எதிரிகளுடன் போரிட்டு நீங்கள் அவர்களின் கழுத்தையும் அவர்கள் உங்கள் கழுத்தையும் வெட்டுவதை விடவும் சிறந்தது ஆகும். அதற்கு நபித்தோழர்கள் "ஆம்" அதனை எமக்கு காண்பித்துத் தாருங்கள் என்றார்கள். நபியவர்கள் கூறினார்கள் அதுதான் அல்லாஹ்வை- திக்ர் செய்வது –நினைவுகூர்வது என்றார்கள்.இமாம்களான திர்மிதி, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
ஸுலைமான் பின் ஸுரத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது இரண்டு மனிதர்கள் ஒருவரையொருவர் ஏசிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரின் முகம் (கோபத்தால்) சிவந்து விட்டது. அவரது கழுத்து நரம்புகள் புடைத்து விட்டன. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வாராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும், ஷைத்தானைவிட்டு அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்’ (அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தான்) என்று இவர் பிரார்த்தித்தால் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும்” என்று கூறினார்கள். ஆகவே, மக்கள் அந்த மனிதரிடம், ‘‘நபி (ஸல்) அவர்கள், ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக்கோருவீராக!› என்று கூறினார்கள்” எனத் தெரிவித்தார்கள். அதற்கு அவர், ‘‘எனக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறது?” என்று கேட்டார்.இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'சுவனம் உங்களொருவரின் செருப்பின் வாரை விட மிக நெருக்கமானதாகும், நரகமும் அதே போன்றுதான்'.இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்
இவ்வுலகம் முஃமினுக்கு சுவர்க்கமும்,காபிருக்கு நரகமுமாகும்" என்று ரஸூல் (ஸல்) கூறினார்கள் என அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ கதாதா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : நல்ல கனவுகள் அல்லாஹ்விடமிருந்து வருபவையாகும். கெட்ட கனவுகள் ஷைத்தானிடமிருந்து வருபவையாகும். உங்களில் யாராவது பயங்கரமான ஓர் கெட்ட கனவைக் கண்டால், தனது இடப்பக்கம் உமிழ்ந்துவிட்டு, அதன் தீங்குகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கேட்கட்டும். அப்போது அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தமட்டாது.இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு கூறுகின்றார்கள் : 'ஐவேளை தொழுகை, ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரை, ஒரு ரமழான் முதல் அடுத்த ரமழான் வரை பெரும் பாவங்களை ஒருவர் தவிர்ந்து கொள்ளும் பட்சத்தில் அவற்றுக்கிடையிலுள்ள சிறுபாவங்களுக்கு அவைகள் குற்றப்பரிகாரமாக அமைந்து விடுகிறது.'இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரல்) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுபவர்களாக இருந்தார்கள் : யா அல்லாஹ்! நான் உன்னிடம், நேர்வழியையும், இறையச்சத்தையும், பத்தினித்தனத்தையும், தன்நிறைவையும் கேட்கின்றேன்.இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
عن أبي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال: «إن العبد لَيَتَكَلَّمُ بالكلمة من رِضْوَانِ الله تعالى ما يُلْقِي لها بَالًا يَرْفَعُهُ الله بها درجاتٍ، وإن العبد لَيَتَكَلَّمُ بالكلمة من سَخَطِ الله تعالى لا يُلْقِي لها بَالًا يَهْوِي بها في جهنم». وعن أبي عبد الرحمن بلال بن الحارث المزني رضي الله عنه : أن رسول الله صلى الله عليه وسلم قال: «إن الرجل لَيَتَكَلَّمُ بالكلمة من رِضْوَانِ الله تعالى ما كان يظن أن تبلغ ما بَلَغَتْ يكتب الله له بها رِضْوَانَهُ إلى يوم يَلْقَاهُ، وإن الرجل لَيَتَكَلَّمُ بالكلمة من سَخَطِ الله ما كان يظن أن تبلغ ما بَلَغَتْ يكتب الله له بها سَخَطَهُ إلى يوم يَلْقَاهُ».حديث أبي هريرة -رضي الله عنه-: رواه البخاري. حديث بلال المزني -رضي الله عنه-: رواه الترمذي وابن ماجه ومالك وأحمد
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: «إنَّ في الجنَّة مائةَ دَرَجَة أعَدَّهَا الله للمُجاهِدين في سَبِيل الله ما بَيْنَ الدَّرَجَتَيْنِ كما بين السماء والأرض».رواه البخاري
عن جابر رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: «إن في الليل لساعة، لا يُوَافِقُهَا رجُلٌ مُسلم يَسأل الله تعالى خيرًا من أمْرِ الدنيا والآخرة، إلا أعْطَاه إِياه، وذلك كُلَّ ليلة».رواه مسلم
அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ் கூறுகின்றான்: என் அடியான் என்னைப் பற்றி நினைக்கும் இடத்தில் நான் உள்ளேன். அவன் என்னை நினைவுபடுத்தும் போது நான் அவனோடு உள்ளேன். அவன் தனக்குள் என்னை நினைவு படுத்தினால், நான் எனக்குள் அவனை நினைவு படுத்துவேன். அவன் ஒரு கூட்டத்தில் என்னை நினைவுபடுத்தினால், அவர்களை விடச் சிறந்த ஒரு கூட்டத்தில் அவனை நான் நினைவு படுத்துவேன். அவன் என்னை ஒரு சாண் நெருங்கி வந்தால், நான் அவனை ஒரு முழம் நெருங்குவேன். அவன் என்னை ஒரு முழம் நெருங்கிவந்தால், நான் அவனை ஒரு பாகம் நெருங்கிவருவேன். அவன் என்னிடம் நடந்துவந்தால், நான் அவனிடம் விரைந்து வருவேன்.இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : கிராமவாசி ஒருவர் நபி ஸல்லல்லாஹு அவர்களிடம் வந்து, எனக்கு ஒரு (நற்)செயலை அறிவியுங்கள். நான் அதைச் செய்தால் சொர்க்கம் செல்ல வேண்டும்.என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீர் அல்லாஹ்வையே வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; கடமையான தொழுகையைக் கடைப்பிடிக்க வேண்டும்; கடமையான ஸகாத்தையும் நிறைவேற்ற வேண்டும்; ரமளானில் நோன்பு நோற்க வேண்டும் என்றார்கள். அதற்கு அவர், என் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன்மேல் ஆணையாக! இதைவிட அதிகமாக வேறெதையும் செய்யமாட்டேன் என்றார். அவர் திரும்பிச் சென்றதும் நபி (ஸல்) அவர்கள், சொர்க்கவாசிகளில் ஒருவரைப் பார்ப்பது யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் (இதோ) இவரைப் பார்த்துக் கொள்ளட்டும்! என்றார்கள்.இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
عن سهل بن سعد الساعدي ـرضي الله عنه- قَالَ رَسُول اللَّه -صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم-: «لو كانت الدنيا تَعدل عند الله جَناح بَعوضة، ما سَقَى كافراً منها شَرْبَة ماء».رواه الترمذي
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா மற்றும் அபூ ஸஈத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் கூறுகின்றார்கள்: 'ஒரு முஸ்லிமை தைக்கும் முள் உட்பட, அவனுக்கு நேரிடும் சிரமம், நோய், கவலை, துக்கம், மனவேதனைகள் ஆகிய எதுவாயினும் அதற்குப் பதிலாக அவனின் பாவத்தின் சிலதை அல்லாஹ் மன்னித்து விடுகிறான்.'இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்தாகும் : ஸலாத்திற்கு பதிலுரைத்தல், நோயுற்றறால் நலம் விசாரித்தல், மரணித்தால் அவரின் இறுதி சடங்கில் பின்துயர்தல், விருந்துக்கு அழைத்தால் பதிலளித்தல், தும்மி, அல்ஹம்து லில்லாஹ் எனக் கூறினால் பதிலுரைத்தல்'.இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
"பறட்டைத் தலையும் புழுதியும் படிந்த நிலையி்ல் வீட்டு வாயல்களில் விடப்பட்டோர் பலர் இவர்கள் எதையேனும் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறினால் அதனை அல்லாஹ் நிறைவேற்றி வைப்பான்" என ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என்று அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'விற்றாலும், வாங்கினாலும், கடனைத் திருப்பக் கேட்டாலும் மென்மையாக நடந்து கொள்ளும் ஓர் அடியானுக்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக!'.இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்