பிக்ஹும் அதன் அடிப்படைகளும்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
Available in 53 languages
«அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ் கூறுகின்றான் : ஆதமுடைய மகனின் அமல்கள் அனைத்தும் அவனுக்குரியதாகும். நோன்பைத் தவிர. ஏனெனில் அது எனக்குரியதாகும். அதற்கு நானே கூலி வழங்குவேன். நோன்பு ஒரு கேடயமாகும். உங்கள் ஒருவருடைய நோன்பு தினமாக இருந்தால், அவர் கெட்டவார்த்தைகள் பேசவேண்டாம், வீணாக சப்தமிடவேண்டாம். யாராவது அவருக்கு ஏசினால், அல்லது சண்டைக்கு வந்தால் 'நான் நோன்பாளி' என்று கூறிவிடட்டும். முஹம்மதுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ, அவன் மீது சத்தியமாக! நோன்பாளியின் வாயில் இருந்து வரும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட வாசமானது. ஒரு நோன்பாளி சந்தோசப்படும் இரு சந்தோசங்கள் உள்ளன: அவன் நோன்பு திறக்கும் போது சந்தோசப்படுவான். தனது ரப்பை சந்திக்கும் போது, தனது நோன்பை நினைத்து சந்தோசப்படுவான்.»Meaning translation ·
Saved at original quality








