சிறப்புக்களும் ஒழுக்கங்களும்
அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள்:
Available in 70 languages
«அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள்: உயர்வும் கண்ணியமிக்கோனாகிய தம் இறைவன் அறிவித்ததாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்: 'ஓர் அடியார் ஒரு பாவம் செய்துவிட்டார். பிறகு 'இறைவா! (நான் ஒரு பாவம் செய்து விட்டேன்.) என் பாவத்தை மன்னிப்பாயாக!' என்று கூறினார். உடனே உயர்வும் கண்ணியமும் மிக்கவனாகிய இறைவன், 'என் அடியான் ஒரு பாவம் செய்துவிட்டுப் பிறகு தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிக்கவும் செய்வான் பாவங்களுக்காகத் தண்டிக்கவும் செய்வான் என்றும் அறிந்துகொண்டான்' என்று சொல்கிறான். பிறகு அந்த அடியார் மீண்டும் ஒரு பாவத்தைச் செய்துவிட்டு, 'என் இறைவா! என் பாவத்தை மன்னிப்பாயாக!' என்று பிரார்த்தித்தார். அப்போதும் உயர்வும் கண்ணியமும் மிக்கவனாகிய அல்லாஹ் -இறைவன்- , '(இம்முறையும்) என் அடியான் ஒரு பாவத்தைச் செய்துவிட்டுப் பிறகு, தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிக்கவும் செய்வான்; பாவங்களுக்காகத் தண்டிக்கவும் செய்வான் என்று அறிந்துகொண்டான். எனது அடியானை மன்னித்து விட்டேன், அவன் நாடியதைச் செய்யட்டும்' என்று சொல்கிறான்.»Meaning translation ·
Saved at original quality








