Hadith for the World
சிறப்புகள்

திக்ரின் சிறப்புகள்

10 hadiths

10 hadiths

அபூதர்தா ரழியல்லாஹு அன்ஹூ நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியதாக கூறினார்கள் : நான் உங்களுக்கு ஒர் அமலை காண்பித்துதரவா ? அது உங்களின் எல்லா அமல்களைவிடவும் சிறந்தது. உங்கள் அதிபதியிடம் அது மிகவும் தூய்மையானது. உங்கள் அந்தஸ்த்தை மிகவும் அதிகப்படுத்தக்கூடியது. தங்கம் வெள்ளியை செலவளிப்பதை விடவும் உங்களுக்குச் சிறந்தது. மட்டுமல்ல, நீங்கள் உங்கள் எதிரிகளுடன் போரிட்டு நீங்கள் அவர்களின் கழுத்தையும் அவர்கள் உங்கள் கழுத்தையும் வெட்டுவதை விடவும் சிறந்தது ஆகும். அதற்கு நபித்தோழர்கள் "ஆம்" அதனை எமக்கு காண்பித்துத் தாருங்கள் என்றார்கள். நபியவர்கள் கூறினார்கள் அதுதான் அல்லாஹ்வை- திக்ர் செய்வது –நினைவுகூர்வது என்றார்கள்.இமாம்களான திர்மிதி, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மக்கா செல்லும் சாலையில் பயணம் மேற்கொண்ட போது 'ஜும்தான்' எனப்படும் மலையொன்றைக் கடந்து சென்றார்கள். அப்போது, 'செல்லுங்கள்: இது 'ஜும்தான்' மலை ஆகும். தனித்துவிட்டவர்கள் (முபர்ரித்தூண்கள்) வெற்றி பெற்றுவிட்டார்கள்;' என்று சொன்னார்கள். மக்கள், 'தனித்து விட்டவர்கள் (முபர்ரித்தூண்கள்) என்போர் யார், அல்லாஹ்வின் தூதரே?' என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூரும் ஆண்களும் நினைவுகூரும் பெண்களும் ஆவர்' என்று பதிலளித்தார்கள்.இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக நபித்தோழர்களில் ஒருவராகிய அகர்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்விடம் தௌபா செய்து மீளுங்கள். நிச்சயமாக நான் ஒரு நாளைக்கு 100 தடவைகள் தௌபாச் செய்கிறேன்.இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள்: உயர்வும் கண்ணியமிக்கோனாகிய தம் இறைவன் அறிவித்ததாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்: 'ஓர் அடியார் ஒரு பாவம் செய்துவிட்டார். பிறகு 'இறைவா! (நான் ஒரு பாவம் செய்து விட்டேன்.) என் பாவத்தை மன்னிப்பாயாக!' என்று கூறினார். உடனே உயர்வும் கண்ணியமும் மிக்கவனாகிய இறைவன், 'என் அடியான் ஒரு பாவம் செய்துவிட்டுப் பிறகு தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிக்கவும் செய்வான் பாவங்களுக்காகத் தண்டிக்கவும் செய்வான் என்றும் அறிந்துகொண்டான்' என்று சொல்கிறான். பிறகு அந்த அடியார் மீண்டும் ஒரு பாவத்தைச் செய்துவிட்டு, 'என் இறைவா! என் பாவத்தை மன்னிப்பாயாக!' என்று பிரார்த்தித்தார். அப்போதும் உயர்வும் கண்ணியமும் மிக்கவனாகிய அல்லாஹ் -இறைவன்- , '(இம்முறையும்) என் அடியான் ஒரு பாவத்தைச் செய்துவிட்டுப் பிறகு, தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிக்கவும் செய்வான்; பாவங்களுக்காகத் தண்டிக்கவும் செய்வான் என்று அறிந்துகொண்டான். எனது அடியானை மன்னித்து விட்டேன், அவன் நாடியதைச் செய்யட்டும்' என்று சொல்கிறான்.இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
عن أبي ذر الغفاري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: «ألاَ أُخْبِرُكَ بِأَحَبِّ الكَلاَمِ إِلَى اللهِ؟ إنَّ أَحَبَّ الكلام إِلى الله: سبحان اللهِ وبحمدِهِ».رواه مسلم
عن أبي هريرة رضي الله عنه مرفوعاً: «والذي نفسي بيده، لو لم تذنبوا، لذهب الله بكم، وجاء بقوم يُذْنِبُونَ، فيستغفرون اللهَ تعالى، فيغفر لهم».رواه مسلم
என்றும் நிலைத்திருக்கும் நல்லமல்கள்لَا إلَهَ إلَّا اللَّهُ، وَسُبْحَانَ اللَّهِ، وَاَللَّهُ أَكْبَرُ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إلَّا بِاَللَّهِ எனும் வாசகங்களாகும்.இதனை இப்னு ஹிப்பான் அறிவித்தார் - இந்த ஹதீஸை ஹாகிம் பதிவு செய்துள்ளார் - இந்த ஹதீஸை அந்நஸாயி பதிவு செய்துள்ளார்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹூரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்: 'யார் "ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி" வபிஹம்திஹி' ( பொருள்: அல்லாஹ்வை புகழ்வதோடு அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்) என 100 தடவைகள் கூறுகிறாரோ அவரின் பாவங்கள் கடல் நுரையளவு போல் இருப்பினும் அவை மன்னிக்கப்பட்டு விடும்'.இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
தான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் கேட்டதாக அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: தொழுகை அறிவிப்பாளரின் (முஅத்தின்) அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என்மீது ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில், என்மீது யார் ஒருமுறை ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள்புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள். வஸீலா என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத்தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
உஸ்மான் இப்னு அபில் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! ஷைத்தான் எனக்கும், எனது தொழுகைக்குமிடையில் குறுக்கிட்டு எனது ஓதலை குழப்புகிறான் என்று கூறிய போது, நபியவர்கள்; "அவன்தான் ஹின்ஸப் எனப்படும் ஷைத்தான், அவன் குழப்புவதை நீர் உணர்ந்தால் அவனை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடிவிட்டு, உமது இடது பக்கத்தில் மூன்று விடுத்தம் துப்பிவிடு' என்று கூற, நான் அவ்வாறே செய்தேன், அல்லாஹ் அவனை விட்டும் என்னை காப்பாற்றி விட்டான் என்று கூறினார்கள்.இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்