Hadith for the World
Tap the image to view it full size
சிறப்புக்களும் ஒழுக்கங்களும்

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்:

Available in 48 languages
«இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துன்பம் நேரும் போது, 'லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம். லா இலாஹ இல்லல் லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வ ரப்புல் அர்ழி வ ரப்புல் அர்ஷில் கரீம்' என்று ஓதுவார்கள். (பொருள்: கண்ணியமிக்கோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ் வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. மாபெரும் அரியணையின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் சிறப்பான அரியணையின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.)»

Meaning translation ·

Explanation

The meaning in a few plain lines

மிகுந்த பதட்டம் மற்றும் துக்கத்தின் போது நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுவார்கள்: 'லா இலாஹ இல்லல்லாஹ்': அல்லாஹ்வைத் தவிர வேறு உண்மையான கடவுள் இல்லை. 'அல்-அளீம்': என்பது தனது தாத் (மெய்நிலை) மற்றும் பண்புகளிலும் செயல்களிலும் (உயர்ந்த அந்தஸ்தையும் மகத்துவத்தையும் பெற்றவனாவான். 'அல்-ஹலீம்' : என்பது பாவியை உடனடியாகத் தண்டிக்காமல், மாறாக அதைத் தாமதப்படுத்தி, தனக்கு அவனை தண்டிப்பதற்கான சக்தி இருந்து, எல்லாவற்றின் மீதும் வல்லமைப் படைத்தாவனாக இருக்கும் அவன் அவனை மன்னிப்பவன் என்பது பொருளாகும் . 'லா இலாஹ இல்லல்லாஹ் ரப்புல்-அர்ஷில்-அலீம்' : அதாவது அவனே மகத்தான சிம்மாசனத்தை படைத்தவன்; 'லா இலாஹ இல்லல்லாஹ் ரபபுஸ் ஸமாவாதி வல் அர்ழி' : வானங்களையும் பூமியையும் படைத்தவன் அல்லாஹ் மட்டுமே, மேலும் அவற்றுக்கிடையே உள்ளவற்றைப் படைத்தவன், அதன் உரிமையாளன் சீர்படுத்துபத்துபவன் மற்றும் தான் விரும்புவதைக் செய்பவன் என்பது இதன் கருத்தாகும் 'ரப்புல் அர்ஷில் கரீம்' என்பது: சிறப்பான சிம்மாசனத்தைப் படைத்தவன் என்பதைக் குறிக்கும்.

Source
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
Download image

Saved at original quality