சிறப்புக்களும் ஒழுக்கங்களும்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் :
Available in 55 languages
«அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'நீங்கள் உண்மையைக் கடைப்பிடியுங்கள். ஏனென்றால் நிச்சயமாக உண்மை நன்மைக்கு வழி காட்டும். மேலும் நிச்சயமாக நன்மை சுவர்க்கத்திற்கு வழிகாட்டும் . மேலும் மனிதன் உண்மை பேசிக் கொண்டும் உண்மையைத் தேடிக் கொண்டும் இருக்கும் போது அவன் அல்லாஹ்விடம் உண்மையாளன் என்று எழுதப்படுவான். நீங்கள் பொய் சொல்வதையிட்டு உங்களை எச்சரிக்கை செய்கிறேன். ஏனெனில் நிச்சயமாகப் பொய் தீமைக்கு வழிகாட்டும். மேலும் நிச்சயமாக தீமை நரகிற்கு வழிகாட்டும். எனவே மனிதன் பொய் பேசிக் கொண்டும் பொய்யைத் தேடிக் கொண்டும் இருக்கும் போது அல்லாஹ்விடம் அவன் பொய்யன் என்று எழுதப்படுவான்'»Meaning translation ·
Saved at original quality








