Hadith for the World
Tap the image to view it full size
சிறப்புக்களும் ஒழுக்கங்களும்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடமிருந்து-அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் :

Available in 70 languages
«நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடமிருந்து-அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : 'இரண்டு வார்த்தைகள் நாவுக்கு எளிதானவையாகும். (நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவையாகும். அளவற்ற அருளாளனுக்கு மிகவும் பிரியத்திற்குரியவையுமாகும். அவை : 'ஸுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி' (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்), 'ஸுப்ஹானல்லாஹில் அழீம்' (கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்)'.»

Meaning translation ·

Explanation

The meaning in a few plain lines

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு மனிதன் எந்த சிரமுமின்றி எல்லா வேளைகளிளும் இலகுவாக கூறக்கூடிய இரண்டு வார்த்தைகள் பற்றிக் குறிப்பிடுகிறார்கள். அவை மீஸானில் வைக்கப்படும் நன்மைகளில் மிகவும் கணதியானதாகவும், அருளாளனான எங்கள் இரட்சகனுக்கு அதி விருப்பத்திற்குரியதாகவும் உள்ளது. அவ்வார்த்தைகள் இரண்டும் பின்வருமாறு : 'ஸுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி' (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்), 'ஸுப்ஹானல்லாஹில் அழீம்' (கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்)'. இவை இரண்டும் அல்லாஹ்வின் மேன்மை, அவனின் பரிபூரணத்துவம், எல்லாவித குறைகளிலிருந்து நீங்கியிருத்தல் போன்ற விடயங்களை உள்ளடக்கியுள்ளது.

Source
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
Download image

Saved at original quality