Hadith for the World
Topic

இஸ்லாமியஅடிப்படைக் கொள்கை

135 hadiths

135 hadiths

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூபர்ஸதுல் அஸ்லமி ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். ((மறுமையில் அடியான் தன்னுடைய வாழ்நாளை எவ்வாறு கழித்தான்? அவனுடைய கல்வியை கொண்டு என்ன செய்தான்? செல்வத்தை எப்படி சம்பாதித்தான்? எவ்வழியில் செலவு செய்தான்? அவனுடைய உடலை எவ்வழியில் பயன்படுத்தினான்? ஆகிய கேள்விகளுக்கு அவன் பதிலளிக்காமல் அவனுடைய பாதங்கள் நகராது.))இதனை இமாம் திர்மிதி பதிவு செய்துள்ளார்
عن أبي هريرة رضي الله عنه مرفوعاً: «لما خلق اللهُ الخَلْقَ كتب في كتاب، فهو عنده فوق العرش: إن رحمتي تَغْلِبُ غضبي». وفي رواية: «غَلَبَتْ غضبي» وفي رواية: «سَبَقَتْ غضبي».متفق عليه
عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَثَلُ الْمُؤْمِنِينَ فِي تَوَادِّهِمْ وَتَرَاحُمِهِمْ وَتَعَاطُفِهِمْ مَثَلُ الْجَسَدِ، إِذَا اشْتَكَى مِنْهُ عُضْوٌ تَدَاعَى لَهُ سَائِرُ الْجَسَدِ بِالسَّهَرِ وَالْحُمَّى».متفق عليه
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : நான், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் 'பாவங்களிலேயே மிகப் பெரியது எது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள்'உன்னைப் படைத்த, இறைவனுக்கே நீ இணைகற்பிப்பது ஆகும்' என்று பதிலளித்தார்கள். 'பிறகு எது?' என்று கேட்டேன் அதற்கு அவர்கள், ''உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீயே கொலை செய்வது' என்று கூறினார்கள். நான், 'பிறகு எது?' என்றேன். 'உன் அண்டை வீட்டுக்காரனின் மனைவியுடன் நீ விபசாரம் புரிவது' என்றார்கள்.இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ அய்யூப் அல் அன்ஸாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'ஒருவர் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. (மேலும்) அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வது ஆகுமனதல்ல, இவர்களில் ஸலாமை கொண்டு முதலில் முந்திக்கொண்டவரே இவர்கள் இருவரில் சிறந்தவராவார்'.இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஸிர்மா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : யார் ஒரு முஸ்லிமிற்குத் தீங்கு இழைக்கின்றானோ, அல்லாஹ் அவனுக்கு தீங்கிழைப்பான். மேலும் எவன் ஒருவன் முஸ்லிமை சிரமத்தில் ஆழ்த்துகிறானோ, அல்லாஹ் அவனைக் சிரமத்தில் ஆழ்த்துவான்.இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : கன்னங்களில் அடித்துக்கொள்பவர்கள், ஆடைகளைக் கிழித்துக்கொள்பவர்கள், ஜாஹிலிய்யாக் கால வார்த்தைப் பிரயோகங்களைக் கூறுபவர்கள் எங்களைச் சார்ந்தவர்கள் அல்ல.இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
عن أبي أمامة رضي الله عنه قال: سمعتُ رسولَ اللهِ صلى الله عليه وسلم يقولُ: «اقْرَؤُوا القرْآنَ؛ فَإنَّهُ يَأتِي يَوْمَ القِيَامَةِ شَفِيعًا لأَصْحَابِهِ».رواه مسلم
عن جابر بن عبد الله رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم : «يُبْعَثُ كلُّ عبدٍ على ما مات عليه».رواه مسلم
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُؤْمِنُ الْقَوِيُّ، خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللهِ مِنَ الْمُؤْمِنِ الضَّعِيفِ، وَفِي كُلٍّ خَيْرٌ، احْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ، وَاسْتَعِنْ بِاللهِ وَلَا تَعْجَزْ، وَإِنْ أَصَابَكَ شَيْءٌ، فَلَا تَقُلْ لَوْ أَنِّي فَعَلْتُ كَانَ كَذَا وَكَذَا، وَلَكِنْ قُلْ قَدَرُ اللهِ وَمَا شَاءَ فَعَلَ، فَإِنَّ (لَوْ) تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ».رواه مسلم
عن أنس بن مالك رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه كان إذا أكل طعاما، لعق أصابعه الثلاث. قال: وقال: «إذا سقطت لُقمة أحدكم فليُمِطْ عنها الأذى، وليأكلها ولا يَدَعْهَا للشيطان» وأمر أن تُسْلَتَ القَصْعَةُ، قال: «فإنكم لا تدرون في أيِّ طعامكم البركة» وعن جابر بن عبد الله رضي الله عنه أن رسولَ اللهِ صلى الله عليه وسلم قالَ: "إنّ الشيطانَ يَحضُرُ أحدَكُم عندَ كلِ شيءٍ من شَأنِه، حتى يَحضُرَهُ عندَ طعامِهِ، فإذا سَقطتْ لقمةُ أحدِكُم فليَأخُذْها فَلْيُمِطْ ما كانِ بها من أذى، ثم ليَأكُلْها ولا يَدَعْها للشيطانِ، فإذا فَرَغَ فليَلْعَقْ أصابعَهُ، فإنه لا يَدري في أيِّ طَعامه البركة"حديث أنس رواه مسلم. حديث جابر رواه مسلم
ஜரீர் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'நாங்கள் முழு நிலவுள்ள-பௌர்னமி- இரவில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் முழு சந்திரனை நோக்கி 'இந்த சந்திரனை நீங்கள் தடங்கலின்றி (தெளிவாக கஷ்டமின்றி) காண்பது போல் நிச்சயமாக உங்களுடைய இறைவனைக் காண்பீர்கள்! சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப் படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள்!' என்று கூறினார்கள்'. பின்னர் நபியவர்கள் (வஸப்பிஹ் பிஹம்திரப்பிக) என்ற வசனத்தை ஓதினார்கள்' பொருள் : சூரிய உதயத்திற்கு முன்னறும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்னரும் உனது இரட்சனின் புகழைக் கொண்டு துதிப்பீராக'இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மூஸா அல்அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : 'நிச்சயமாக அல்லாஹ் அநியாக்காரனுக்கு அவகாசம் வழங்கிக்கொண்டிருப்பான், ஆனால் அவனை தண்டிக்க ஆரம்பித்துவிட்டால் அவனை விடவும் மாட்டான்' என்று நபியவர்கள் கூறிவிட்டு, ஸூறா ஹூதின் 102 ம்; வசனத்தை ஒதினார்கள். ''மேலும் அக்கிரமம் புரிந்து கொண்டிருக்கக் கூடிய கிராமங்களை உம் இரட்சகன்; தண்டிக்கும் போது அவனது தண்டனை இப்படித்தான் இருக்கும். நிச்சயமாக அவனது பிடி –தண்டனை- வேதனை மிக்கதாகவும்; மிகக் கடினாமானதாகவும் இருக்கும்''இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மனைவியரில் சிலர் அறிவித்துள்ளார்கள் : 'குறி சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை நம்புகிறவனின் நாற்பது நாட்களுடைய தொழுகைகள் ஏற்கப்பட மாட்டாது'.இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அறிவிக்கிறார்கள் : "பெரும்பாவங்கள் : அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், அவனது உபாயத்திலிருந்து அச்சமற்றிருத்தல், அவனது அருளிலிந்து நிராசையடைதல், அவனது ரஹ்மத்திலிருந்து நம்பிக்கையிழத்தல் என்பனவாகும்".இதனை அப்துர்ரஸ்ஸாக் பதிவு செய்துள்ளார்
عن البراء بن عازب –رضي الله عنهما- قال: كانَ رجلٌ يَقرَأُ سُورةَ الكهفِ، وعندَه فَرَسٌ مَربُوطٌ بِشَطَنَيْنِ، فَتَغَشَّتْهُ سَحَابَةٌ فَجَعَلَتْ تَدْنُو، وجَعلَ فَرَسُه يَنفِرُ منها، فلمّا أصبحَ أتَى النبيَّ صلى الله عليه وسلم فَذَكرَ ذلك له، فقالَ: «تِلكَ السَّكِينةُ تَنَزَّلَتْ للقُرآنِ».متفق عليه
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூத்தர்தா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : "கஹ்ஃப் அத்தியாயத்தின் முதல் பத்து வசனங்களை யார் மனனம் செய்கிறாரோ அவர் தஜ்ஜாலை விட்டும் பாதுகாப்பு பெறுவார். மற்றொரு அறிவிப்பில் ஸுறா கஹ்பின் இறுதி பத்து வசனங்கள் என்று வந்துள்ளது".இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: «ما توطَّنَ رجلٌ مسلمٌ المساجدَ للصلاة والذِّكر، إلا تَبَشْبَشَ اللهُ له، كما يَتَبَشْبَشُ أهلُ الغائب بغائبهم إذا قَدِمَ عليهم».رواه ابن ماجه وأحمد
அபூ ஹூரைரா ரழியல்லாஹுஅன்ஹு அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது : அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள் : “எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றைவிட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வழிபாடுகளால் என் பக்கம் நெருங்கி வந்துகொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறை நம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எந்தச் செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.”இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்
عن أنس بن مالك وأبي هريرة رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم فيما يرويه عن ربه عز وجل قال: «إذا تَقَرَّبَ العبدُ إليَّ شِبْرًا تَقَرَّبْتُ إليه ذِرَاعًا، وإذا تَقَرَّبَ إليَّ ذِرَاعًا تَقَرَّبْتُ مِنْهُ بَاعًا، وإذا أتاني يمشي أَتَيْتُهُ هَرْوَلَةً».حديث أنس -رضي الله عنه- رواه البخاري . حديث أبي هريرة -رضي الله عنه- متفق عليه
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழில்லாஹு அறிவித்துள்ளார்கள் : 'இறைநம்பிக்கை (ஈமான்) என்பது 'எழுபதுக்கும் அதிகமான' அல்லது 'அறுபதுக்கும் அதிகமான' கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது 'அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை' என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். வெட்கமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்'.இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அதிய் இப்னு ஹாதிம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: (மறுமையில்) உங்களில் ஒவ்வொருவருடனும் அல்லாஹ் உரையாடுவான். அப்போது அவனுக்கும் உங்களுக்குமிடையே மொழிபெயர்ப்பாளர் எவரும் இருக்கமாட்டார்." நீங்கள் உங்கள் வலப் பக்கம் பார்ப்பீர்கள். அங்கு நீங்கள் முன்பே செய்து அனுப்பிய செயல்களையே காண்பீர்கள். உங்கள் இடப் பக்கம் பார்ப்பீர்கள். அங்கும் நீங்கள் முன்பே செய்து அனுப்பிய செயல்களையே காண்பீர்கள். உங்கள் முன்னால் பார்ப்பீர்கள். உங்கள் முகத்துக்கு எதிரே நரகத்தையே காண்பீர்கள். ஆகவே, ஒரு பேரீச்சம் பழத்துண்டை (தர்மமாக)க் கொடுத்தாவது நரகத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அகீம் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "பாதுகாப்பிற்காக யார் ஒரு பொருளைத் தொங்க விடுகிறாரோ அதன் பக்கமே அவர் சாட்டப்பட்டு விடுவார்".இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார் - இதனைஅஹ்மத் பதிவு செய்திருக்கிறார்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக தாரிக் இப்னு அஷ்யம் அல்அஷ்ஜஈ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள் : 'அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை (லாஇலாஹ இல்லல்லாஹ்) என்று யார் (உறுதிமொழி) கூறி, (மக்களால்) வழிபாடு செய்யப்படும் இதர தெய்வங்களை நிராகரித்து விடுகிறாரோ அவரது உடைமையும் உயிரும் பாதுகாப்புப் பெற்றுவிடும். அவரது (இரகசியமான விடயம் குறித்த) விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது'.இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்