Hadith for the World
Topic

இஸ்லாமியஅடிப்படைக் கொள்கை

135 hadiths

135 hadiths

عن أبي هريرة رضي الله عنه مرفوعًا: «إِنَّ الله تَعَالى يَقُول يَوْمَ القِيَامَة: أَيْنَ المُتَحَابُّونَ بِجَلاَلِي؟ اليَوم أُظِلُّهُم فِي ظِلِّي يَوْمَ لاَ ظِلَّ إِلاَّ ظِلِّي».رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹூரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்: 'யாரொருவர் நேர்வழிக்கு அழைக்கிறாரோ அவரைப் பின்பற்றுபவர்களுக்குக் கிடைக்கும் வெகுமதியைப் பெறுவார், ஆனால் இது அவர்களுக்கான வெகுமதியைக் குறைக்காது. மேலும்,வழிகேட்டை நோக்கி அழைப்பவருக்கு, அவரைப் பின்பற்றுபவர்களுக்குச் சமமான பாவம் இருக்கும். ஆனால் இது அவர்களின் பாவத்தைக் குறைக்காது.'இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக மஹ்மூத் இப்னு லபீத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'உங்களிடம் நான் மிக அதிகமாக அஞ்சுவது சிறிய இணைவைப்பாகும், அல்லாஹ்வின் தூதரே சிறிய இணைவைப்பு என்றால் என்ன? என ஸஹாபாகக்கள் வினவிய போது முகஸ்துதி எனக் கூறினார்கள். மறுமை நாளில் மக்களுக்கு தங்களின் அமல்களுக்கு அல்லாஹ் கூலி வழங்குகையில் முகஸ்துதியாளர்களைப் பார்த்து ' உலகில் யாருக்கு காட்டுவதற்காக செய்தீர்களோ அவர்களிடம் செல்லுங்கள், அவர்களிடம் ஏதும் வெகுமதி உள்ளதா என்பதை பாருங்கள் என்று கூறிவிடுவான்'இமாம் அஹ்மத் இதனைப் பதிவு செய்திருக்கிறார்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுவதைத் தான் கேட்டதாக உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'கிறிஸ்தவர்கள் மர்யமின் புதல்வரை (ஈஸாவை) அளவு கடந்து புகழ்ந்ததை போன்று என்னை நீங்கள் அளவு கடந்து புகழ வேண்டாம், நான் அல்லாஹ்வின் அடியானாவேன், எனவே அல்லாஹ்வின் அடியார், தூதர் என்றே கூறுங்கள்'.இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்
அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் : இறைத்தூதர் அவர்களே! மறுமை நாளில் தங்களின் பரிந்துரைக்குத் தகுதி படைத்த மனிதர் யார்?' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம அவர்களிடம் நான் கேட்டபோது, 'அபூ ஹுரைராவே! என்னைப் பற்றிய செய்திகளின் மீது உமக்கிருக்கும் பேரார்வம்; எனக்குத் தெரியும். எனவே, இச்செய்தியைப் பற்றியும் உமக்கு முன்னர் யாரும் என்னிடம் கேட்க மாட்டார்கள் என நான் நம்பியிருந்தேன்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறிவிட்டு, 'மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் என் பரிந்துரைக்குத் தகுதி பெற்றவர் யாரெனில், உள்ளத்தினால் - தூய்மையான எண்ணத்துடன் 'உண்மையாக வணங்கி வழிபடுவதற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்று சொன்னவர்தான்' என்று கூறினார்கள்'.இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "யாருடைய தேவை நிறைவேறுவதிலிருந்து சகுனம் தடுக்கின்றதோ அவர் இணைவைத்து விட்டார், அதற்குரிய பரிகாரம் என்ன என வினவ, இறைவா நலவு உன்னிடமிருந்து மாத்திரம் தான், நல்ல சகுனமும் உன்னிடமிருந்து மாத்திரம் தான், உன்னைத் தவிர வேறு இறைவனில்லை என்று கூறட்டும்".இதனைஅஹ்மத் பதிவு செய்திருக்கிறார்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக உபாதா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை' என்றும் 'முஹம்மது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்' என்றும், 'ஈஸா(அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்' என்றும், 'அல்லாஹ் மர்யமை நோக்கிச் சொன்ன ('ஆகுக!' என்னும்) ஒரு வார்ததை(யால் பிறந்தவர்)' என்றும், 'அவனிடமிருந்து (ஊதப்பட்ட) ஓர் உயிர்' என்றும், சொர்க்கம் (இருப்பது) உண்மை தான்' என்றும், நரகம் இருப்பது உண்மைதான் எனவும் (சொல்லால் உரைத்து, உள்ளத்தால் நம்பி) உறுதிமொழி கூறுகிறவரை அல்லாஹ் அவரின் செயல்களுக்கேற்ப சொர்க்கத்தில் நுழைவிப்பான்.'இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு வார்த்தையை கூற அதற்கு நான் வேறு ஒன்றை கூறினேன். நபியவர்கள் 'அல்லாஹ்வுக்கு நிகராக வேறொருவரை அழைக்கும் நிலையில் மரணித்தவர் நரகில் நுழைவார்'. அப்போது நான் அல்லாஹ்வுக்கு நிகராக வேறொருவரை அழைக்காத நிலையில் மரணித்தவர் சுவர்க்கம் நுழைவார் என்று கூறினேன்.இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
عن أبي هريرة رضي الله عنه مرفوعًا: «صلاة الرجل في جماعة تَضعُفُ على صلاته في بيته وفِي سُوقِه خمسا وعشرين ضِعفًا، وذلك: أَنَّه إِذَا تَوَضَّأ، فَأَحسَن الوُضُوء، ثمَّ خرج إلى المسجد لاَ يُخرِجُهُ إلاَّ الصلاة؛ لَم يَخْطُ خُطوَةً إِلاَّ رُفِعَت له بِها درجة، وَحُطَّ عَنهُ بها خطيئة، فإذا صلَّى لم تزل الملائكة تُصَلِّي عليه، ما دام في مُصَلاَّه: اللهُمَّ صَلِّ عليه، اللهم اغفِر له، اللهم ارْحَمه، ولا يزال في صلاة ما انتظر الصلاة».متفق عليه
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : எனக்கு முன்னர் யாருக்கும் கொடுக்கப்படாத ஐந்து அம்சங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு மாத பயணத்ததூரத்தின் அளவு (என்னைப் பற்றிய) பயத்தைக் கொண்டு நான் உதவப்பட்டுள்ளேன். பூமி தொழுமிடமாகவும், சுத்தம் செய்யக் கூடிதாகவும் எனக்கு ஆக்கித் தரப்பட்டுள்ளது. எனவே, எனது சமுதாயத்தைச் சேர்ந்த யாரும் எந்த இடத்தில் தொழுகை நேரத்தை அடைந்து கொண்டாலும், தொழுது விடட்டும். போர்ச் செல்வங்கள் எனக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளன. எனக்கு முன்னர் யாருக்கும் அது ஹலாலாக இருக்கவில்லை. எனக்கு 'ஷபாஆ' எனும் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. நபிமார்கள் தமது கூட்டத்திற்கு மாத்திரமே அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தார்கள். நான் எல்லா மனிதர்களுக்காகவும் அனுப்பப்பட்டுள்ளேன்.இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
عن معاذ بن جبل رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه قال: «قَالَ اللهُ -عَزَّ وجَلَّ-: المُتَحَابُّون فِي جَلاَلِي، لَهُم مَنَابِرُ مِن نُورٍ يَغْبِطُهُم النَبِيُّونَ والشُهَدَاء».رواه الترمذي وأحمد
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: «إنَّ في الجنَّة مائةَ دَرَجَة أعَدَّهَا الله للمُجاهِدين في سَبِيل الله ما بَيْنَ الدَّرَجَتَيْنِ كما بين السماء والأرض».رواه البخاري
அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ் கூறுகின்றான்: என் அடியான் என்னைப் பற்றி நினைக்கும் இடத்தில் நான் உள்ளேன். அவன் என்னை நினைவுபடுத்தும் போது நான் அவனோடு உள்ளேன். அவன் தனக்குள் என்னை நினைவு படுத்தினால், நான் எனக்குள் அவனை நினைவு படுத்துவேன். அவன் ஒரு கூட்டத்தில் என்னை நினைவுபடுத்தினால், அவர்களை விடச் சிறந்த ஒரு கூட்டத்தில் அவனை நான் நினைவு படுத்துவேன். அவன் என்னை ஒரு சாண் நெருங்கி வந்தால், நான் அவனை ஒரு முழம் நெருங்குவேன். அவன் என்னை ஒரு முழம் நெருங்கிவந்தால், நான் அவனை ஒரு பாகம் நெருங்கிவருவேன். அவன் என்னிடம் நடந்துவந்தால், நான் அவனிடம் விரைந்து வருவேன்.இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : சூரியன் உதயமாகும் நாட்களில் மிகச் சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும். அதில் தான் ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைக்கப்பட்டார்கள் அந்நாளில் தான் சுவர்க்கத்தினுள் தங்கவைக்கப் பட்டு அந்நாளில் தான் அதிலிருந்து வெளியேற்றவும் பட்டார்கள். அத்துடன் யுக முடிவு நாளும் ஜும்ஆத் தினத்தில்தான் நிகழும்'.இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: «كان داود -عليه السلام- لا يأكلُ إلا من عمل يده». وعن المقدام بن معد يكرب رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: «ما أكل أحد طعاما قط خيرا من أن يأكل من عمل يده، وإن نبي الله داود صلى الله عليه وسلم كان يأكل من عمل يده».حديث أبي هريرة رضي الله عنه: رواه البخاري. حديث المقداد رضي الله عنه: رواه البخاري
عن ابن مسعود رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : «من أصابته فَاقَة فأنْزَلها بالناس لم تُسَدَّ فَاقَتُهُ، ومن أنْزَلها بالله، فَيُوشِكُ الله له بِرزق عاجل أو آجل».رواه أبو داود والترمذي وأحمد
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: "கஷ்டத்தில் உள்ள ஒருவனுக்கு தவணை கொடுப்பவனுக்கு அல்லது அவனுக்கு விட்டுக் கொடுப்பவனுக்கு, அல்லாஹ்வின் அர்ஷின் நிழலன்றி வேறு நிழல் இல்லாத மறுமை நாளிலே, தன் அர்ஷின் நிழலின் கீழ் அல்லாஹ் நிழல் அளிப்பான்".இமாம்களான திர்மிதி மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் : 'நிச்சயமாக அல்லாஹ் என் சமூகத்தாரிடத்தில்; தவறுதலாக ஏற்படக் கூடியதையும் மறதியாக ஏற்படக்கூடியதையும் இன்னும் நிர்பந்தமாக நிகழக்கூடிவற்றையும் எனக்காக மன்னித்து விடுகிறான்'.இதனை இமாம்களான இப்னுமாஜா, பைஹகீ போன்றோர் அறிவித்துள்ளனர்
عن أبي هريرة رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: «جَعَلَ اللهُ الرحمةَ مائة جُزْءٍ، فَأَمْسَكَ عِنْدَهُ تِسْعَةً وَتِسْعِينَ، وأَنْزَلَ في الأَرْضِ جُزْءًا وَاحِدًا، فَمِنْ ذَلِكَ الجُزْءِ يَتَرَاحَمُ الخَلَائِقُ، حتى تَرْفَعَ الدَّابَّةُ حَافِرَهَا عَنْ وَلَدِهَا خَشْيَةَ أَنْ تُصِيبَهُ». وفي رواية «إِنَّ للهِ تعالى مئةُ رحمةٍ، أَنْزَلَ منها رحمةً واحدةً بَيْنَ الجِنِّ والإنسِ والبَهَائِمِ والهَوَامِّ، فَبِهَا يَتَعَاطَفُونَ، وبها يَتَرَاحَمُونَ، وبِهَا تَعْطِفُ الوَحْشُ على وَلَدِهَا، وأَخَّرَ اللهُ تعالى تِسْعًا وتِسْعِينَ رحمةً يَرْحَمُ بِهَا عِبَادَهُ يومَ القِيَامَةِ». وعن سلمان الفارسي رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : «إِنَّ للهِ تعالى مئةُ رحمةٍ فمنها رحمةٌ يَتَرَاحَمُ بها الخَلْقُ بَيْنَهُمْ، وتِسْعٌ وتِسْعُونَ لِيَومِ القِيَامَةِ». وفي رواية: «إِنَّ اللهَ تَعَالَى خَلَقَ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ والأَرْضَ مئةَ رحمةٍ كُلُّ رحمةٍ طِبَاقَ مَا بَيْنَ السَّمَاءِ إلى الأَرْضِ، فَجَعَلَ منها في الأَرْضِ رَحْمَةً فبها تَعْطِفُ الوَالِدَةُ على وَلَدِهَا، والوَحْشُ والطَّيْرُ بَعْضُهَا عَلَى بَعْضٍ، فإذا كانَ يومُ القيامةِ أَكْمَلَهَا بِهَذِه الرحمةِ».حديث أبي هريرة -رضي الله عنه-: متفق عليه. حديث سلمان -رضي الله عنه-: رواه مسلم
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'நிச்சயமாக அல்லாஹ் உங்களது தோற்றங்களையோ, செல்வங்களையோ பார்க்க மாட்டான், இருப்பினும் உங்களது உள்ளங்களையும், செயல்களையுமே பார்க்கின்றான்.'இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
அபூ தர் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : உயர்ந்தோனாகிய கண்ணியமிக்க அல்லாஹ்விடமிருந்து அறியப் பெற்றதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அறிவிக்கிறார்கள் : எனது அடியார்களே, மக்களுக்கு அநீதி இழைப்பதை எனக்கு நானே தடை செய்திருக்கின்றேன். (அதுபோலவே) அதை உங்களுக்கும் தடை செய்திருக்கின்றேன். எனவே நீங்கள் அநீதி இழைத்துக் கொள்ளாதீர். எனது அடியார்களே, நான் நேர்வழி காட்டியவர்களைத் தவிர, நீங்கள் அனைவரும் வழி தவறியவர்கள். எனவே, என்னிடம் நேர்வழிகாட்டக் கோருங்கள், நான் நேர்வழி காட்டுவேன். எனது அடியார்களே, நான் உணவளித்தவர்களைத் தவிர நீங்கள் எல்லோரும் பசியால் வாடியிருப்பீர்கள். ஆகவே என்னிடம் வேண்டுங்கள். நான் உங்களுக்கு உணவளிக்கின்றேன். எனது அடியார்களே! நான் ஆடை அளித்தவர்களைத் தவிர நீங்கள் எல்லோரும் ஆடையற்றவர்களே. ஆகவே என்னிடம் கேளுங்கள், நான் உங்களுக்கு ஆடை அளிக்கின்றேன். எனது அடியார்களே! நீங்கள் இரவும் பகலும் பாவம் செய்கின்றீர்கள். நானோ பாவங்களை மிகவும் மன்னிப்பவன். ஆகவே என்னிடம் மன்னிப்புத் தேடுங்கள், நான் உங்களை மன்னிக்கின்றேன். எனது அடியார்களே! நீங்கள் எவ்வளவு முயன்றாலும் எனக்குத் தீங்கு செய்கின்ற நிலையை நீங்கள் அடைய முடியாது. இன்னும் நீங்கள் எவ்வளவு முயன்றாலும் எனக்கு எந்த நன்மையையும் செய்து விட முடியாது. எனது அடியார்களே! உங்களுக்கு முன் சென்றவர்களும், உங்களுக்குப் பின்னால் வருபவர்களும் உங்களுள் மனிதர்கள், ஜின்கள் ஆகிய நீங்கள் அனைவரும் என்னை வணங்குவதில் மிகவும் இறையச்சம் மிக்கவர்களாகவும், பக்திமிக்கவர்களாகவும் இருந்து என்னை வணங்கினாலும், அது எந்த விதத்திலும் என்னுடைய ஆட்சியின் எல்லையை விரிவடையச் செய்வதில்லை. எனது அடியார்களே! உங்களுக்கு முன் சென்றவர்களும் உங்களுக்குப் பின்னால் வருபவர்களும், உங்களுள் மனிதர்கள் ஜின்கள் ஆகிய அனைவரும் எத்தனை தான் கெட்டவர்களாக இருந்து குழப்பங்களை விளைவித்தாலும், அது என்னுடைய ஆட்சியின் எல்லையை எள்ளளவும் குறைத்து விடாது. என்னுடைய அடியார்களே! உங்களுக்கு முன் சென்றவர்களும், உங்களுக்கு பின்னால் வருபவர்களும் மனிதர்களும், ஜின்களும் ஒரே இடத்தில் கூடி நின்று என்னிடத்தில் வேண்டியதெல்லாம் கேட்டகவும், அவ்வாறு நீங்கள் கேட்பதையெல்லாம் நான் தந்தாலும் அது என்னிடமிருப்பதை, ஓர் ஊசி முனையைக் கடலில் முக்கி எடுப்பதால் குறையும் அளவிற்குக் கூட குறைத்து விடுவதில்லை. எனது அடியார்களே! இவைதான் உங்களுடைய செயல்கள். அவற்றைக் கொண்டே நான் உங்களை கணிக்கின்றேன். அவைகளை வைத்துக் கொண்டு தான் நான் உங்களுக்கு பின்னர் கூலி தருகின்றேன். ஆகவே உங்களில் நலவைப் பெற்றுக் கொண்டவர் அல்லாஹ்வைப் புகழட்டும். நலவு அல்லாதவற்றைக் காண்பவர்கள் தங்களைத் தவிர வேறு எவரையும் குறைகூற வேண்டாம்.இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் : ஒரு நாள் நான் நபி (ஸல்) அவர்களின் பின்னால் அமர்ந்திருந்தேன்.! அப்போது அவர்கள் என்னிடம் சிறுவனே! நான் சில அறிவுரைகளைக் கற்றுத் தருகின்றேன் என்று சொன்னார்கள்: நீ அல்லாஹ்வை பாதுகாத்துக்கொள். அவன் உன்னைப் பாதுகாப்பான். நீ அல்லாஹ்வை பாதுகாத்துக்கொள். அவனை உனக்கு முன் கண்டுகொள்வாய். நீ கேட்டால் அல்லாஹ்விடமே கேள். உதவி தேடினால் அல்லாஹ்விடமே தேடு. அறிந்து கொள்! ஒட்டுமொத்த சமூகமும் ஒன்று திரண்டு உனக்கு ஏதாவது நன்மை செய்திட முயன்றாலும் உனக்கு அல்லாஹ் ஏற்கனவே ஏற்படுத்தி வைத்துள்ளதைக் காட்டிலும் அதிகமாக எந்த நன்மையையும் அவர்களால் செய்திட முடியாது. இன்னும் ஒட்டுமொத்த சமூகமும் ஒன்று திரண்டு உனக்கு ஏதாவது தீங்கிழைக்க முயன்றாலும் அல்லாஹ் உனக்கு ஏற்கனவே குறித்து வைத்தவற்றைக் கொண்டல்லாமல் எந்தக் தீங்கையும் அவர்களால் செய்திட முடியாது. பேனாக்கள் உயர்த்தப்பட்டு விட்டன. ஏடுகள் காய்ந்து விட்டன.இதனை இமாம் திர்மிதி பதிவு செய்துள்ளார்
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضيَ اللهُ عنه أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أَحَبُّ الْبِلَادِ إِلَى اللهِ مَسَاجِدُهَا، وَأَبْغَضُ الْبِلَادِ إِلَى اللهِ أَسْوَاقُهَا».رواه مسلم
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'எனது சமுதாயத்தில் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள். ஆனால் ஏற்க மறுத்தோரை தவிர' என்று கூறினார்கள். அதற்கு 'இறைத்தூதர் அவர்களே! ஏற்க மறுத்தவர்கள்; யார்?' என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், 'எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறு செய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவராவார்' என்று பதிலளித்தார்கள்'.இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்