Hadith for the World
சுத்தம்

இயல்பாக பேணவேண்டிய சுன்னாக்கள்

3 hadiths

3 hadiths

ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இரவில் (உறங்கி) எழுந்ததும் பல் துலக்கு(ம் குச்சியால் தமது வாயைக் கழுவி சுத்தம் செய்)வார்கள்.இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் செவிமடுத்ததாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : "இயற்கை மரபுகள் ஐந்தாகும் : விருத்தசேதனம் (கத்னா) செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைவது, மீசையைக் கத்தரித்துக் கொள்வது, நகங்களை வெட்டிக் கொள்வது, அக்குள் முடிகளை அகற்றுவது ஆகியனவாகும்''.இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
ஷுரைஹ் பின் ஹானி அவர்கள் கூறுகின்றார்கள்: நான் ஆஇஷா (ரழி) அவர்களிடம், “நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வீட்டினுள் நுழைந்ததும் முதலில் என்ன செய்வார்கள்?" எனக் கேட்டதற்கு, "பல் துலக்குவார்கள்" என்றார்கள் அவர்கள்.இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்