Hadith for the World
பிக்ஹும் அதன் அடிப்படைகளும்

வணக்கவழிபாட்டுகள் சம்பந்தமான பிக்ஹ்

231 hadiths

231 hadiths

இப்னுஅப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்ஸாரிப் பெண் ஒருவரை விழித்து -இப்பெண்ணின் பெயரை இப்னு அப்பாஸ் கூறினார்கள் ஆனால் நான் அவளுடைய பெயரை மறந்துவிட்டேன்.- 'எம்முடன் ஹஜ்ஜு செய்வதற்கு வருவதை உம்மை எது தடுத்தது?' என வினவியதற்கு அந்தப் பெண்மணி எம்மிடம் நீர் இரைக்கும் இரு ஒட்டகங்கள்தானிருந்தன. அவைகளில் ஒன்றில் தன் கணவரும் மகனும் ஹஜ்ஜுக்கு சென்றுவிட்டனர். மற்றதை நாம் நீர் இரைப்பதற்காக விட்டுச் சென்றனர் என்று கூறினாள். அப்பொழுது இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: ரமழான் மாதம் வந்துவிட்டால் நீங்கள் உம்ராவை நிறை வேற்றுவாயாக ! ஏனெனில் அம்மாதத்தில் நிறை வேற்றப்படும் உம்ரா வணக்கம் ஹஜ்ஜு வணக்கத்துக்கு நிகராகும் என்று கூறினார்கள்இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
عن فَضَالَةُ بنُ عُبَيْدٍ وسلمان الفارسي وعقبة بن عامر الجهني رضي الله عنهم مرفوعاً: «كُلُّ مَيِّتٍ يُخْتَمُ على عَمَلِهِ إلا الُمرَابِطَ في سبيل الله، فإنه يَنْمِي لَهُ عَمَلَهُ يوم القيامة، ويُؤَمَّنُ فتنة القبر».رواه أبو داود والترمذي وأحمد من حديث فضالة -رضي الله عنه
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள் : 'உடலுறவில் ஈடுபடாமல், பாவங்கள் செய்யாமல் ஹஜ் செய்தவர் தனது தாய் அன்று ஈண்டெடுத்த பாலகன் போன்று திரும்புவார்'.இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
உம்முல் முஃமினீன் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள் : அல்லாஹ்வின் தூதரே! அறப்போர் புரிவதை மிகச்சிறந்த அமலாக நாம் காண்கின்றோம். நாமும் அறப் போரில் கலந்துகொள்ளட்டுமா? அதற்கு நபியவர்கள் இல்லை, எனினும் அறப்போரில் மிகச்சிறந்தது இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாகும் எனக் கூறினார்கள் .இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்
عَنِ ابْنِ عُمَرَ رَضيَ اللهُ عنهما قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا جَمَعَ اللهُ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ يَوْمَ الْقِيَامَةِ يُرْفَعُ لِكُلِّ غَادِرٍ لِوَاءٌ، فَقِيلَ: هَذِهِ غَدْرَةُ فُلَانِ بْنِ فُلَانٍ».متفق عليه
அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கலந்து கொண்ட அறப்போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் காணப்பட்டாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைக் கண்டித்தார்கள்.இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
عن عبد الله بن أبي أوفى رضي الله عنه أَنَّ رسول الله صلى الله عليه وسلم فِي بَعْض أَيَّامه التي لَقِي فيها العدو انتظر، حتى إذا مَالَتِ الشمس قام فِيهم، فقال: «أَيُّها الناس، لا تَتَمَنَّوْا لِقَاء الْعَدُوِّ، وَاسْأَلوا الله الْعافية فَإِذا لَقِيتموهم فَاصْبِرُوا، وَاعلموا أَنَّ الْجَنَّة تحت ظِلال السُّيوف ثُمَّ قَال النَّبِي صلى الله عليه وسلم: اللهمَّ مُنزِلَ الْكتاب، وَمُجْرِيَ السَّحاب، وَهازم الأَحْزاب: اهْزِمهم، وَانصُرنا علَيهم».متفق عليه
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «رِبَاطُ يَوْمٍ فِي سَبِيلِ اللَّهِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا عَلَيْهَا، وَمَوْضِعُ سَوْطِ أَحَدِكُمْ مِنَ الجَنَّةِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا عَلَيْهَا، وَالرَّوْحَةُ يَرُوحُهَا العَبْدُ فِي سَبِيلِ اللَّهِ أَوِ الغَدْوَةُ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا عَلَيْهَا».متفق عليه
அபூ மூஸா ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பின் வரும் விடயம் பற்றி வினவப்பட்டது ஒரு மனிதர் தான் ஒரு வீரன் என்பதற்காக யுத்தம் புரிகின்றார். இன்னொருவர் இனமாச்சரியத்திற்காக யுத்தம் புரிகின்றார். மற்றவர் முகஸ்துதிக்காக யுத்தம் புரிகின்றார். இவர்களில் யார் அல்லாஹ்வின் பாதையில் உள்ளார்? அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: அல்லாஹ்வின் வார்த்தை மேலோங்கி உயர் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக போர் புரிகின்றாறோ அவர் அல்லாஹ்வின் பாதையில் உள்ளார் என்றார்கள்.இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
عن أبي هريرة رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : «ما من مَكْلُومٍ يُكْلَمُ في سبيل الله، إلا جاء يومَ القيامة، وكَلْمُهُ يَدْمَى: اللَّونُ لَوْنُ الدَّمِ، والرِّيحُ رِيحُ المِسْكِ».متفق عليه
عن عَبْد اللهِ بن أبي أوفى رضي الله عنهما قال: «غَزَوْنَا مَعَ رَسُولِ الله صلى الله عليه وسلم سَبْعَ غَزَوَاتٍ، نَأْكُلُ الْجَرَادَ».متفق عليه
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஸஈத் அல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'நீங்கள் பாங்கோசையைக் கேட்டால் முஅத்தின் கூறுவது போன்று கூறுங்கள்'இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
முகீரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'நான் ஒரு பயணத்தின்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் (வுழூச் செய்தபோது) அவர்களின் இரண்டு காலுறைகளையும் கழற்றுவதற்குக் குனிந்தேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'அதைவிட்டுவிடுவீராக, கால்கள் இரண்டும் வுழூவுடன் இருக்கும் நிலையில்தான் காலுறைகளை அணிந்தேன்' என்று கூறிவிட்டு அவ்விரு காலுறைகளின் மீதும் மஸ்ஹ் செய்தார்கள்'இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
عن عبد الله بن عمر رضي الله عنهما «أنَّ رسُول الله -صلَّى الله عليه وسلَّم- دَخَل مكَّة مِن كَدَاٍء، مِن الثَنِيَّة العُليَا التِّي بالبَطحَاءِ، وخرج من الثَنِيَّة السُفلَى».متفق عليه
உமர் (ரலி) அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளதாவது, அவர்கள் ஒரு தடவை ஹஜருல் அஸ்வதிடம் வந்து, அதனை முத்தமிட்டுவிட்டு இவ்வாறு கூறினார்கள் : நீ, பயனளிக்கவோ, தீங்கிழைக்கவோ சக்தியற்ற ஒரு கல் மாத்திரமே என்பதை நான் அறிவேன். நபியவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் கண்டிருக்காவிட்டால், நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்.இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹுஅறிவித்துள்ளார்கள்: '(தொழுகையில்) உங்களது அணிகளை சீர் செய்து கொள்ளுங்கள்,ஏனெனில் அணியை சீர் செய்து கொள்வதிலேயே தொழுகையின் பூரணத்துவம் தங்கியுள்ளது.இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இரவில் (உறங்கி) எழுந்ததும் பல் துலக்கு(ம் குச்சியால் தமது வாயைக் கழுவி சுத்தம் செய்)வார்கள்.இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
عن عبد الله بن زيد بن عاصم المازني رضي الله عنه قال: (شُكِيَ إلى النبيِّ صلى الله عليه وسلم الرَّجلُ يُخَيَّلُ إِليه أنَّه يَجِد الشَّيء في الصَّلاة، فقال: لا ينصرف حتَّى يَسمعَ صَوتًا، أو يَجِد رِيحًا).متفق عليه
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: (தொழுகை நடத்தும்) இமாமுக்கு முன் தலையை உயர்த்துபவர், அல்லாஹ் தன் தலையை கழுதையின் தலையாக மாற்றிவிடுவிடுவதை அல்லது அவரின் தோற்றத்தை கழுதையின் தோற்றமாக மாற்றிவிடுவதை அஞ்ச வேண்டாமா?இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'உணவு சாப்பிடுவதற்கு தயார் நிலையில் இருக்கும் போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக் கொண்டும் தொழக்கூடாது'.இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் (எனது இரண்டு கைகளையும் பிடித்து) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இரண்டு கைகளுக்கிடையே என் கை இருந்த நிலையில், குர்ஆனின் அத்தியாயத்தைக் கற்றுத்தருவதைப் போன்று (தொழுகையின் இருப்பில் ஓதப்படும்) தஷஹ்{ஹதை (அத்தஹிய்யாத்தைக்) எனக்கு அவர்கள் கற்றுத்தந்தார்கள். (அது பின்வருமாறு) ' அத்தஹிய்யாது லில்லாஹி வஸ்ஸலவாது வத்தய்யிபாது அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன். அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு' பொருள் : (அனைத்துக் காணிக்கைகளும் வணக்கங்களும்-தொழுகைகளும்- பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்களின் மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் சுபிட்சமும் நிலவட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்களின் மீதும் சாந்தி நிலவட்டுமாக! வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறெருவமில்லை என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாராகவும் தூதராகவும் இருக்கிறார்கள் என்றும் நான் உறுதி கூறுகிறேன்). புஹாரி முஸ்லிமின் இன்னொரு அறிவிப்பில்' நிச்சயமாக அல்லாஹ் ' அஸ்ஸலாம் ஆவான்' உங்களில் ஒருவர் தொழுகையில் இறுதி அமர்வில் அமர்ந்தால் 'அத்தஹிய்யாது லில்லாஹி வஸ்ஸலவாது வத்தய்யிபாது அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் என்று கூறட்டும். இவ்வாறு கூறும்போது வானம் பூமியிலுள்ள எல்லா அடியாருக்கும் நீங்கள் ஸலாம் கூறியவர்களாவீர்கள். (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறெருவமில்லை என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாராகவும் தூதராகவும் இருக்கிறார்கள் என்றும் நான் உறுதி கூறுகிறேன்). இதன் பிறகு உங்களுக்கு விருப்பமாக துஆவைத் தேர்ந்தெடுத்து அதன் மூலம் பிரார்த்தியுங்கள்'.இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
عن أبي موسى الأشعري رضي الله عنه قال: خَسَفَت الشمس على زمان رسول الله صلى الله عليه وسلم . فقام فَزِعًا، ويخشى أن تكون الساعة، حتى أتى المسجد، فقام، فصلى بأطول قيام وسجود، ما رأيته يفعله في صلاته قطُّ، ثم قال: إن هذه الآيات التي يُرْسِلُهَا الله عز وجل : لا تكون لموت أحد ولا لحياته، ولكن الله يُرْسِلُهَا يُخَوِّفُ بها عباده، فإذا رأيتم منها شيئا فَافْزَعُوا إلى ذكر الله و دُعَائِهِ وَاسْتِغْفَارِهِ.متفق عليه
அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மின் அதாபில் கப்ரி வமின் அதாபின்னாரி வமின் ஃபித்னதில் மஹ்யா வல் மமாத், வமின் ஃபித்னதில் மஸீஹித் தஜ்ஜால்.என்று -இறுதி தஷஹ்ஹுதின் பின் பிரார்திக்கக் கூடியவராக இருந்தார்கள்: பொருள்: இறைவா! நான் உன்னிடம் கப்ரின் வேதனையிலிருந்தும், நரகின்; வேதனையிலிருந்தும், வாழ்வு மற்றும் இறப்பின் சோதனையிலிருந்தும், தஜ்ஜாலால் ஏற்படும் குழப்பத்திலிருந்தும்; பாதுகாப்பு தேடுகிறேன். முஸ்லிமின் அறிவிப்பில் : 'உங்களில் ஒருவர் கடைசி தஷஹ்ஹூதை ஓதி முடித்த பின், நரக வேதனை, கப்ரு வேதனை, வாழ்வு மற்றும் மரணத்தின் சோதனை, தஜ்ஜால் மூலம் ஏற்படும் தீங்கு ஆகிய நான்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடட்டும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் (முதல்) தக்பீருக்கும் கிராஅத்துக்கும் இடையே சிறிது நேரம் மௌனமாக இருப்பார்கள். நான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம்), 'அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தக்பீருக்கும் கிராஅத்துக்கும் இடையே நீங்கள் மௌனமாக இருக்கும் போது என்ன கூறுவீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் நான், அல்லாஹும்ம பாஇத் பைனீ வபைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிக்கி வல்மஃக்ரிப்; அல்லாஹும்ம நக்கினீ மினல் கதாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யழு மினத் தனஸ்; அல்லாஹும்மஃக்சில் கதாயாய பில்மாஇ வஸ்ஸல்ஜி வல்பரத் என்று கூறுகிறேன் என்றார்கள். (பொருள்: இறைவா! கிழக்குக்கும் மேற்குக்கும் இடையே நீ ஏற்படுத்திய தூரத்தைப் போன்று, எனக்கும் என் தவறுகளுக்கும் இடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான ஆடை, அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படு வதைப் போன்று என் தவறுகளைவிட்டு என்னைத் தூய்மைப்படுத்துவாயாக! தண்ணீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவுவாயாக!).இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்