Topicசிறப்புக்களும் ஒழுக்கங்களும்
288 hadiths
288 hadiths
அபூ மூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள் பின்வரும் துஆவை ஓதுவார்கள் : என்னுடைய ரப்பே! எனது தவறுகளையும், அறியாமையையும், எனது எல்லா விவகாரங்களிலும் நான் செய்த எல்லைமீறல்களையும், என்னை விட நீ அறிந்தவைத்திருப்பவற்றையும் மன்னித்து விடுவாயாக! யா அல்லாஹ்! எனது பாவங்களையும், நான் வேண்டுமென்று செய்தவற்றையும், எனது அறியாமையையும், எனது பரிகாசத்தையும் மன்னித்துவிடுவாயாக! அவை அனைத்துமே என்னிடம் உள்ளன. யா அல்லாஹ்! நான் முற்படுத்தியவைகள், பிற்படுத்தியவைகள், மறைத்துக்கொண்டவைகள், பகிரங்கப் படுத்தியவைகள் என அனைத்தையுமே மன்னித்துவிடுவாயாக! நீயே முற்படுத்துபவன்! நீயே பிற்படுத்துபவன்! நீ அனைத்திற்கும் சக்தியுள்ளவன்.இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : நபியவர்கள் காலையையும், மாலையையும் அடையும் போது பின்வரும் துஆக்களை விடாமல் ஓதி வருவார்கள்: யா அல்லாஹ்! இவ்வுலகிலும், மறுமையிலும் பாதுகாப்பை நான் உன்னிடம் கேட்கின்றேன். யா அல்லாஹ்! எனது மார்க்கத்திலும், எனது உலகத்திலும், எனது குடும்பத்திலும், எனது சொத்துக்களிலும் பாதுகாப்பையும், மன்னிப்பையும் நான் கேட்கின்றேன். யா அல்லாஹ்! எனது மறைவிடங்களை மறைத்துவிடுவாயாக! எனது பயத்தை நீக்கி பாதுகாப்பைத் தருவாயாக! யா அல்லாஹ்! எனக்கு முன்னாலும், பின்னாலும், எனது வலப்புறத்தாலும், இடப்புறத்தாலும், எனக்கு மேலாலும் என்னைப் பாதுகாத்துவிடுவாயாக! எனக்குக் கீழால் எதிர்பார்க்காமல் நான் பிடிக்கப்படுவதை விட்டும் உனது மகத்துவத்தைக் கொண்டு பாதுகாப்புத் தேடுகின்றேன்.இமாம்களான அபூதாவுத், நஸாஈ, இப்னு மாஜா மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது
அப்துல்லாஹ் இப்னு ஸலாம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, மக்கள் அவரைச் சந்திக்க விரைந்தனர், (அவ்வேளை) 'அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்து விட்டார்கள்! அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்து விட்டார்கள்!' என்று மூன்று முறை கூறப்பட்டது. நான் மக்களுடன் அவரைப் பார்க்க வந்தேன், அவரது முகத்தை நான் தெளிவாகக் பார்த்த போது, அவரது முகம் பொய்யரின் முகம் அல்ல என்பதை அறிந்தேன். அவர்கள் கூறியதில் நான் முதலில் கேட்டது: ' மக்களே! ஸலாத்தைப் பரப்புங்கள், மற்றவர்களுக்கு உணவளியுங்கள், உறவைப் பேணுங்கள், இரவில் மக்கள் தூங்கும்போது தொழுங்கள், நீங்கள் நிம்மதியாக சொர்க்கத்தில் நுழைவீர்கள்.'இமாம்களான திர்மிதி, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது