Hadith for the World

All hadiths

The complete card collection, filter by chapter

655 hadiths

நபியவர்கள் கூறியதாக உம்மு தர்தா ரழி அன்ஹா அறிவிக்கிறார்கள் முஸ்லிமான ஒருவர் தன் சகோதரருக்காக மறைவாக கேட்கும் பிரார்த்தனை ஏற்றுக்;கொள்ளப்படும்.பிரார்த்திக்கும் அந்த மனிதரின் தலையருகே நியமிக்கப்பட்ட ஒரு வானவர் இருப்பார்.பிரார்த்தனை செய்யும் அம்மனிதர் தனது சகோதரருக்காக நல்லதை வேண்டும் போதெல்லாம் நியமிக்கப்பட்ட அவ்வானவர் ஆமீன் எனக் கூறி "உனக்கும் இது போலவே கிடைக்கட்டும்" என்று கூறுவார்இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
عَنْ أُمِّ عَطِيَّةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: نُهِينَا عَنِ اتِّبَاعِ الجَنَائِزِ، وَلَمْ يُعْزَمْ عَلَيْنَا.متفق عليه
உங்களுக்கு எதிராக துஆ செய்யாதீர்கள். உங்களின் குழந்தைகளுக்கு எதிராகவும் துஆ செய்யாதீர்கள். இவ்வாறு துஆ செய்வதன் மூலம் நீங்கள் அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டு உங்களுக்கு அவன் துஆ ஏற்கின்ற அந்த நேரத்திற்கு உட்பட்டு வேண்டாம். என ஜாபிர் ரழி அவர்கள் அறிவிக்கிறார்கள்.இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
"நான் எனது இரட்சகனிடம் பிரார்த்தித்தேன். ஆனால் என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை என்று கூறி நீங்கள் அவசரப்படாதவரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும்" என அபூ ஹுரைறா ரழி அவர்கள்அறிவிக்கிறார்கள்.இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவதைக் கேட்டதாக அம்ர் இப்னு அபஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தன்னிடம் கூறியதாக அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : ((இரவின் கடைசிப் பகுதியில் இரட்சகனான அல்லாஹ் அடியானுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளான். இந்நேரத்தில் அல்லாஹ்வை நினைவுகூருகிற அடியார்களில் நீயும் ஒருவனாக இருக்கமுடியுமென்றிருந்தால் அப்படி இருந்து கொள்வீராக)).இமாம்களான அபூதாவுத், திர்மிதி மற்றும் நஸாஈ ஆகியோர் இதை பதிவு செய்துள்ளார்கள்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஸவ்பான் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: “மனிதன் செலவிடும் தீனார்களில் மிகச் சிறந்தது தனது குடும்பத்தினருக்காகச் செலவு செய்யும் தீனாரும், அல்லாஹ்வின் பாதையில் வாகனத்துக்காகச் செலவு செய்யும் தீனாரும், அல்லாஹ்வின் பாதையில் தனது தோழர்களுக்காகச் செலவு செய்யும் தீனாரும் ஆகும். அபூ கிலாபா அவர்கள் கூறுகிறார்கள்: இங்கே நபியவர்கள் குடும்பத்தை முதலில் குறிப்பிடுகிறார்கள். தொடர்ந்தும் அபூகிலாபா குறிப்பிடுகையில் குழந்தைககள் உள்ள ஒரு குடும்பத்திற்கு செலவு செய்யும் ஒரு மனிதனை விடவும் மிகப்பெரும் நற்கூலியை பெறும் உயர் மனிதன் எவர்தான் இருக்க முடியும். காரணம் அவர் அவர்களை சுயகௌரவத்துடன் வாழ வைக்கிறார் அல்லது அவரின் மூலம் அல்லாஹ் நலனை பெற்றுக்கொடுத்து அவர்களை தன்னிறைவு பெற்றவர்களாக ஆக்குகிறான்.இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'முஹம்மதின் உயிர் யாருடைய கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! இந்த(இறுதி)ச் சமுதாயத்திலுள்ள யூதரோ கிறிஸ்தவரோ யாரேனும் ஒருவர் என்(மார்க்கத்தி)னைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகும்கூட நான் கொண்டுவந்த (மார்க்கத்)தை நம்பிக்கை கொள்ளாமல் இறந்துவிட்டால், அவர் நரகவாசிகளில் ஒருவராகவே இருப்பார்'.இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
عن أبي هريرة رضي الله عنه مرفوعاً: «الإيمانُ بِضْعٌ وَسَبْعُونَ أو بِضْعٌ وسِتُّونَ شُعْبَةً: فَأَفْضَلُهَا قَوْلُ: لا إله إلا الله، وَأَدْنَاهَا إِمَاطَةُ الأَذَى عَنِ الطَّرِيقِ، وَالحَيَاءُ شُعْبَةٌ مِنَ الإِيمَانِ».متفق عليه
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு முஸ்லிமான - அல்லது முஃமினான - ஒரு அடியான் வுழூ செய்யும் விதமாக, முகத்தைக் கழுவினால், அவர் தனது இரு கண்களாலும் பார்த்த அனைத்துப் பாவங்களும் அந்த நீருடன் - அல்லது நீரின் கடைசித் துளியுடன் - அவரது முகத்திலிருந்து வெளியேறிவிடும். அவர் தனது இரு கைகளையும் கழுவினால், அவரது இரு கைகளும் பிடித்த அனைத்துப் பாவங்களும் அந்த நீருடன் - அல்லது நீரின் கடைசித் துளியுடன் - அவரது இரு கைகளையும் விட்டு வெளியேறிவிடும். அவர் இரு கால்களையும் கழுவினால், அவர் தனது இரு கால்களாலும் நடந்துசென்ற அனைத்துப் பாவங்களும் அந்த நீருடன் - அல்லது நீரின் கடைசித் துளியுடன் - வெளியேறிவிடும். இவ்வாறே அவர் பாவங்களை விட்டும், தூய்மையடைந்த ஒருவராக வெளியேறுவார்.இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
عن معاذ بن أنس رضي الله عنه مرفوعًا: «مَن كَظَمَ غَيظًا، وَهُو قادر على أن يُنفِذَه، دَعَاه الله سبحانه وتعالى على رؤوس الخَلاَئِق يوم القيامة حتَّى يُخَيِّره من الحُور العَين مَا شَاء».رواه أبو داود والترمذي وابن ماجه وأحمد
ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள் எமக்கு, அல்குர்ஆனின் ஒரு ஸூராவைக் கற்றுத் தருவது போன்று, எல்லா விடயங்களிலும் நன்மையைக் கேட்பதையும் கற்றுத் தருவார்கள். நபியவர்கள் இவ்வாறு கூறுவார்கள் : உங்களில் ஒருவர் ஏதாவது (முக்கிய) விடயத்தைச் செய்ய நாடினால், கடமையல்லாத இரு ரக்அத்கள் தொழுதுவிட்டு, பின்வருமாறு கூறட்டும் : 'யா அல்லாஹ்! உனது அறிவைக் கொண்டு உன்னிடம் நன்மையைக் கேட்கின்றேன். உன்னுடைய சக்தியைக் கொண்டு உன்னிடம் ஆற்றலைக் கேட்கின்றேன். உன்னுடைய பேருபகாரத்தில் இருந்து உன்னிடம் கேட்கின்றேன். நீயே ஆற்றல் மிக்கவன். என்னிடம் ஆற்றல் கிடையாது. நீயே அறிந்தவன். நான் அறியமாட்டேன். மறைவான வற்றை அதிகம் அறிந்தவன் நீயே! யா அல்லாஹ்! இந்த விடயம், எனது மார்க்கத்திற்கும், வாழ்க்கைக்கும், எனது இறுதி முடிவுக்கும் - அல்லது எனது உடனடியான, தாமதமான விடயங்களுக்கும் - நன்மையானதாக இருந்தால், அதை எனக்கு விதித்து விடுவாயாக. மேலும் அதனை எனக்கு இலகுபடுத்தி விடுவாயாக! பின்பு எனக்கு அதில் பரகத் செய்து தருவாயாக! இந்த விடயம், எனது மார்க்கத்திற்கும், வாழ்க்கைக்கும், எனது இறுதி முடிவுக்கும் - அல்லது எனது உடனடியான, தாமதமான விடயங்களுக்கும் - தீமையானதாக இருந்தால், என்னை விட்டும் அதைத் திருப்பிவிடுவாயாக! மேலும், அதையும் என்னை விட்டுத் திருப்பிவிடுவாயாக! நன்மை - எங்கிருந்த போதிலும் - அதை எனக்கு விதித்து விடுவாயாக! பின்பு எனக்கு அதில் திருப்தியைத் தருவாயாக! அவர் தனது தேவையைக் குறித்துச் சொல்வார் என்றும் அதில் வந்துள்ளது.இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்
عن أنس بن مالك رضي الله عنه قال: مرَّ النَّبي - صلى الله عليه وسلم - بامرَأَة تَبكِي عِند قَبرٍ، فقال: «اتَّقِي الله واصْبِري» فقالت: إليك عَنِّي؛ فَإِنَّك لم تُصَب بِمُصِيبَتِي ولم تَعرِفه، فقِيل لها: إِنَّه النَّبِي - صلى الله عليه وسلم - فأتت باب النبي - صلى الله عليه وسلم - فلم تجد عنده بوَّابِين، فقالت: لم أَعرِفكَ، فقال: «إِنَّما الصَّبرُ عِند الصَّدمَةِ الأُولَى». وفي رواية: «تَبكِي على صبِّي لها».متفق عليه
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஸுஹைப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஓர் இறை விசுவாசியின் காரியங்கள் ஆச்சரியமானவை. அவனது விவகாரம் அனைத்தும் அவனுக்கு நலவாக அமைந்து விடுகிறது. இது ஓர் இறை விசுவாசியைத் தவிர மற்றெவருக்கும் அவ்வாறு அமைவதில்லை. அவனுக்கு மகிழ்ச்சியூட்டும் விடயம் ஏற்பட்டால், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறான். அது அவனுக்கு நலவாய் அமைகிறது. அவனுக்குத் தீங்கு ஏற்பட்டால் பொறுமை செய்கிறான். அதுவும் அவனுக்கு நலவாய் அமைகிறது.”இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
عن عائشة رضي الله عنها قالت: كَانَ كَلاَمُ رَسُولِ الله -صلَّى الله عليه وسلَّم- كَلاَمًا فَصلاً يَفْهَمُهُ كُلُّ مَنْ يَسْمَعُهُ.رواه أبو داود واللفظ له، والتُرمذي والنسائي وأحمد
عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعاً: «إِنَّ مِنْ أَشَرِّ النَّاسِ عِندَ الله مَنزِلَةً يَومَ القِيَامَةِ الرَّجُلَ يُفضِي إِلَى المَرْأَةِ وَتُفْضِي إِلَيه، ثُمَّ يَنشُرُ سِرَّهَا».رواه مسلم
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக -அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : அழித்தொழிக்கும் (பெரும் அழிவைத் தரும்) ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்திருங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். அதற்கு அவர்கள் (ஸஹாபாக்கள்) 'இறைத்தூதர் அவர்களே! அவை எவை?' என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அநாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்) என்று (பதில்) கூறினார்கள்.இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: 'யா அல்லாஹ்! எனது மண்ணறையை (சமாதியை) வணங்கப்படும் சிலையாக ஆக்கி விடாதே! தமது நபிமார்களின் மண்ணறைகளை வணக்கஸ் தளங்களாக ஆக்கிக் கொண்ட கூட்டத்தின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக'.இமாம் அஹ்மத் இதனைப் பதிவு செய்திருக்கிறார்
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "சோதனையின் பரப்புக்கேற்ப்பவே கூலியின் பரப்பும் இருக்கும். அல்லாஹ் ஒரு கூட்டத்தை நேசித்தால் அவர்களை சோதிப்பான், அதனைப் பொருந்திக் கொண்டவருக்குப் பொருத்தமுள்ளது, கோபித்தவருக்குக் கோபமுள்ளது".இதனை இப்னு மாஜா பதிவு செய்துள்ளார் - இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'தூய்மையும்; உயர்வும் மிக்க அல்லாஹ் கூறினான்: நான் இணையாளர்களைவிட்டும் இணை கற்பித்தலைவிட்டும் அறவே தேவையற்றவன். யாரேனும் என்னுடன் பிறரையும் இணையாக்கி (எனக்காகவும் பிறருக்காகவும்) நற்செயல் புரிந்தால், அவனையும் அவனது இணைவைப்பையும் (தனியே) விட்டுவிடுவேன்'.இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
عن علي بن أبي طالب رضي الله عنه قال: "حدثوا الناس بما يعرفون، أتريدون أن يُكذَّب اللهُ ورسولهُ؟".أخرجه البخاري
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'உங்களது வீடுகளை மண்ணறைகளாக ஆக்கிக் கொள்ள வேண்டாம், எனது சமாதியைக் கொண்டாடும் இடமாக ஆக்கிக் கொள்ள வேண்டாம், என் மீது நீங்கள் ஸலவாத் கூறுங்கள், நீங்கள் எங்கிருந்த போதிலும் உங்களது ஸலவாத் என்னை வந்தடைகின்றது'.இதனை இமாம் அபூதாவுத் பதிவு செய்துள்ளார்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'நிச்சயம் அல்லாஹ் ரோஷம் கொள்கிறான். இறை நம்பிக்கையாளனான முஃமினும் ரோஷம் கொள்கிறான். அல்லாஹ்வின் ரோஷம் என்பது, அவன் தடைவிதித்துள்ள ஒன்றை (தடையை மீறி) இறைநம்பிக்கையாளர் செய்வதுதான்'.இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
عن أبي هريرة رضي الله عنه مرفوعًا: «إِذَا لَبِسْتُم، وَإِذَا تَوَضَّأتُم، فَابْدَأُوا بَأَيَامِنُكُم».رواه أبو داود واللفظ له، والترمذي وابن ماجه وأحمد
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்: “யார் இரு பெண் பிள்ளைகளை பருவ வயது வரை பொறுப்பேற்று, வளர்க்கின்றாரோ, அவர் மறுமையில் என்னோடு இப்படி வருவார்” என்று கூறிவிட்டு தமது விரல்களை இணைத்துக்காட்டினார்கள்.இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்