Hadith for the World

All hadiths

The complete card collection, filter by chapter

655 hadiths

"நாளை மறுமை நாளில் நரகம் கொண்டு வரப்படும் போது அதில் எழுபதாயிரம் கடிவாளங்கள் இடப்பட்டிருக்கும்.ஒவ்வொரு கடிவாளத்தையும் எழுபதாயிரம் மலக்குகள் இழுத்துக் கொண்டு வருவர்"என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என அப்துல்லாஹ் இப்னு மஸஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஸுஜுதில் 'அல்லாஹும்மஃபிர்லீ தன்பீ குல்லாஹு திக்கஹு வஜில்லஹு வஅவ்வலஹு வஆகிரஹு வஅலானிய(த்)தஹு வஸிர்ரஹு' என்று கூறுவார்கள். இதன் பொருள் : யாஅல்லாஹ்! என் பாவத்தில் சிறியதையும், பெரியதையும், முதலாவதையும், கடைசியானதையும், பகிரங்கமானதையும், இரகசியமானதையும் மன்னிப்பாயாக.இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா கூறுகின்றார்கள் : 'மனிதர்களில் அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்புக்குரியவன் (அசத்தியத்தில்;) கடுமையாக சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான்'.இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் : மனிதர்களை சுவர்க்கத்தினுள் அதிகமாக நுழைவிக்கச் செய்யும் செயல்கள் என்ன என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டது, அதற்கு நபியவர்கள் சுவனத்தில் அதிகம் நுழைவிப்பது அல்லாஹ்வின்மீதான அச்சமும், நற் பண்புகளுமாகும்'. என்றார்கள் மேலும் நரகத்தினுள் அதிகமாக நுழைவிக்கச் செய்யும் செயல்கள் என்ன என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டது, அதற்கு நபியவர்கள் நாவும் மறையுறுப்பும் என்றார்கள்.இமாம்களான திர்மிதி, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
என்றும் நிலைத்திருக்கும் நல்லமல்கள்لَا إلَهَ إلَّا اللَّهُ، وَسُبْحَانَ اللَّهِ، وَاَللَّهُ أَكْبَرُ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إلَّا بِاَللَّهِ எனும் வாசகங்களாகும்.இதனை இப்னு ஹிப்பான் அறிவித்தார் - இந்த ஹதீஸை ஹாகிம் பதிவு செய்துள்ளார் - இந்த ஹதீஸை அந்நஸாயி பதிவு செய்துள்ளார்
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : அதானுக்கும், இகாமத்திற்கும் மத்தியில் கேட்கப்படும் துஆ தட்டப்படமாட்டாது.இமாம்களான அபூதாவுத், திர்மிதி மற்றும் நஸாஈ ஆகியோர் இதை பதிவு செய்துள்ளார்கள்
நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு பிரார்த்திப்பார்கள் என அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : யா அல்லாஹ்! எனது மார்க்கத்தை எனக்கு சீர்செய்து தருவாயாக! அதுவே எனது விவகாரங்களுக்குப் பாதுகாப்பாக உள்ளது. எனது உலக வாழ்வையும் சீர்செய்து தருவாயாக! அதில் தான் எனது வாழ்ப்பு உள்ளது. எனது மறுமையையும் எனக்குச் சீர்செய்து தருவாயாக! அதில் தான் எனது மீளுதல் உள்ளது. இந்த வாழ்க்கையை எனக்கு எல்லா நலவுகளையும் அதிகப்படுத்தித் தரும் ஒன்றாக ஆக்கிவிடு. மரணத்தை எனக்கு அனைத்துத் தீமைகளில் இருந்தும் விடுதலையாக ஆக்கிவிடு.இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
அபூ மூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள் பின்வரும் துஆவை ஓதுவார்கள் : என்னுடைய ரப்பே! எனது தவறுகளையும், அறியாமையையும், எனது எல்லா விவகாரங்களிலும் நான் செய்த எல்லைமீறல்களையும், என்னை விட நீ அறிந்தவைத்திருப்பவற்றையும் மன்னித்து விடுவாயாக! யா அல்லாஹ்! எனது பாவங்களையும், நான் வேண்டுமென்று செய்தவற்றையும், எனது அறியாமையையும், எனது பரிகாசத்தையும் மன்னித்துவிடுவாயாக! அவை அனைத்துமே என்னிடம் உள்ளன. யா அல்லாஹ்! நான் முற்படுத்தியவைகள், பிற்படுத்தியவைகள், மறைத்துக்கொண்டவைகள், பகிரங்கப் படுத்தியவைகள் என அனைத்தையுமே மன்னித்துவிடுவாயாக! நீயே முற்படுத்துபவன்! நீயே பிற்படுத்துபவன்! நீ அனைத்திற்கும் சக்தியுள்ளவன்.இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : நபியவர்கள் காலையையும், மாலையையும் அடையும் போது பின்வரும் துஆக்களை விடாமல் ஓதி வருவார்கள்: யா அல்லாஹ்! இவ்வுலகிலும், மறுமையிலும் பாதுகாப்பை நான் உன்னிடம் கேட்கின்றேன். யா அல்லாஹ்! எனது மார்க்கத்திலும், எனது உலகத்திலும், எனது குடும்பத்திலும், எனது சொத்துக்களிலும் பாதுகாப்பையும், மன்னிப்பையும் நான் கேட்கின்றேன். யா அல்லாஹ்! எனது மறைவிடங்களை மறைத்துவிடுவாயாக! எனது பயத்தை நீக்கி பாதுகாப்பைத் தருவாயாக! யா அல்லாஹ்! எனக்கு முன்னாலும், பின்னாலும், எனது வலப்புறத்தாலும், இடப்புறத்தாலும், எனக்கு மேலாலும் என்னைப் பாதுகாத்துவிடுவாயாக! எனக்குக் கீழால் எதிர்பார்க்காமல் நான் பிடிக்கப்படுவதை விட்டும் உனது மகத்துவத்தைக் கொண்டு பாதுகாப்புத் தேடுகின்றேன்.இமாம்களான அபூதாவுத், நஸாஈ, இப்னு மாஜா மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு துஆக் கேட்பவர்களாக இருந்துள்ளார்கள் : யா அல்லாஹ்! உனது அருட்கொடைகள் நீங்குவதை விட்டும், உனது பாதுகாப்பு மாறிவிடுவதை விட்டும், உனது சோதனைகள் திடீரென வருவதை விட்டும், உனது அனைத்துக் கோபங்களை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன்.இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள் பின்வரும் வார்த்தைகளைக் கொண்டு துஆக் கேட்பார்கள் : யா அல்லாஹ்! கடன் சுமையை விட்டும், எதிரியின் அடக்குமுறையை விட்டும் மேலும், எதிரிகளின் நகைப்பை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்.இமாம்களான நஸாஈ மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
عن عبد الله بن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: «المؤمن الذي يخالط الناس، ويصبر على أذاهم خير من الذي لا يخالط الناس ولا يصبر على أذاهم».رواه الترمذي وابن ماجه وأحمد
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُؤْمِنُ الْقَوِيُّ، خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللهِ مِنَ الْمُؤْمِنِ الضَّعِيفِ، وَفِي كُلٍّ خَيْرٌ، احْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ، وَاسْتَعِنْ بِاللهِ وَلَا تَعْجَزْ، وَإِنْ أَصَابَكَ شَيْءٌ، فَلَا تَقُلْ لَوْ أَنِّي فَعَلْتُ كَانَ كَذَا وَكَذَا، وَلَكِنْ قُلْ قَدَرُ اللهِ وَمَا شَاءَ فَعَلَ، فَإِنَّ (لَوْ) تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ».رواه مسلم
ஒரு முஃமின் தன் முஃமினான சகோதரனின் கண்ணாடியாவான்.என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார் - இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக அபுத்தர்தா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : அடிக்கடி சாபம் இடுபவர்கள், கியாமத் நாளில் சாட்சிகளாகவும், பரிந்துரை செய்பவர்களாகவும் இருக்கமாட்டார்கள்.'இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் செவிமடுத்தாக அந் நுஃமான் இப்னு பஷீர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : பிரார்த்தனையே (துஆவே) வணக்கமாகும்'. என்று கூறிவிட்டு ஸுறா காஃபிரின் 60வது வசனத்தை ஓதினார்கள் : ''என்னை அழையுங்கள் நான் உங்களுக்கு பதிலளிப்பேன்.எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடிக் கின்றார்களோ அவர்கள் இழிவடைந்தவர்களாக நரகத்தினுள் நுழைவார்கள்".இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்
عَنْ عِيَاضِ بْنِ حِمَارٍ أَخِي بَنِي مُجَاشِعٍ رَضيَ اللهُ عنه قَالَ: قَامَ فِينَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ خَطِيبًا، فَقَالَ: وَسَاقَ الْحَدِيثَ وَفِيهِ: «وَإِنَّ اللهَ أَوْحَى إِلَيَّ أَنْ تَوَاضَعُوا حَتَّى لَا يَفْخَرَ أَحَدٌ عَلَى أَحَدٍ، وَلَا يَبْغِي أَحَدٌ عَلَى أَحَدٍ».رواه مسلم
அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மிகவும் அதிகமாக ஓதும்; பிரார்த்தனையாக ' அல்லாஹும்ம ரப்பனா ஆதினா பித்துன்யாக ஹஸனதன் வபில்ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்' காணப்பட்டது. (யா அல்லாஹ் எமது இரட்சகனே ! எமக்கு இவ்வுலகிலும் மறுமையிலும்; நலவைத் தருவாயாக. மேலும் நரக நெருப்பிலிருந்து எம்மை காப்பற்றுவாயாக!இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَيِّدُ الِاسْتِغْفَارِ أَنْ تَقُولَ: اللَّهُمَّ أَنْتَ رَبِّي لاَ إِلَهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي، فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ» قَالَ: «وَمَنْ قَالَهَا مِنَ النَّهَارِ مُوقِنًا بِهَا، فَمَاتَ مِنْ يَوْمِهِ قَبْلَ أَنْ يُمْسِيَ، فَهُوَ مِنْ أَهْلِ الجَنَّةِ، وَمَنْ قَالَهَا مِنَ اللَّيْلِ وَهُوَ مُوقِنٌ بِهَا، فَمَاتَ قَبْلَ أَنْ يُصْبِحَ، فَهُوَ مِنْ أَهْلِ الجَنَّةِ».رواه البخاري
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'நீங்கள் உண்மையைக் கடைப்பிடியுங்கள். ஏனென்றால் நிச்சயமாக உண்மை நன்மைக்கு வழி காட்டும். மேலும் நிச்சயமாக நன்மை சுவர்க்கத்திற்கு வழிகாட்டும் . மேலும் மனிதன் உண்மை பேசிக் கொண்டும் உண்மையைத் தேடிக் கொண்டும் இருக்கும் போது அவன் அல்லாஹ்விடம் உண்மையாளன் என்று எழுதப்படுவான். நீங்கள் பொய் சொல்வதையிட்டு உங்களை எச்சரிக்கை செய்கிறேன். ஏனெனில் நிச்சயமாகப் பொய் தீமைக்கு வழிகாட்டும். மேலும் நிச்சயமாக தீமை நரகிற்கு வழிகாட்டும். எனவே மனிதன் பொய் பேசிக் கொண்டும் பொய்யைத் தேடிக் கொண்டும் இருக்கும் போது அல்லாஹ்விடம் அவன் பொய்யன் என்று எழுதப்படுவான்'இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடமிருந்து-அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : 'இரண்டு வார்த்தைகள் நாவுக்கு எளிதானவையாகும். (நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவையாகும். அளவற்ற அருளாளனுக்கு மிகவும் பிரியத்திற்குரியவையுமாகும். அவை : 'ஸுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி' (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்), 'ஸுப்ஹானல்லாஹில் அழீம்' (கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்)'.இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை தொட்டு-அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : 'பிரார்த்தனையை விட அல்லாஹ்விடம் மிக மதிப்பிற்குரிய விடயம் வேறு ஏதுமில்லை'.இமாம்களான திர்மிதி, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : 'தர்மத்தினால் செல்வம் குறைந்து விடுவதில்லை, மன்னிக்கும் அடியானின் கண்ணியத்தை அல்லாஹ் அதிகரிக்கச் செய்யாமல் இருப்பதில்லை, அல்லாஹ்வுக்காக பணிந்து நடப்பவனை அல்லாஹ் உயர்த்தாமல் இருப்பதில்லை'.இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூத்தர்தா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை பாதுகாக்கிறாரோ அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில்(நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கிறான்'.இமாம்களான திர்மிதி மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது